விஷால் நடிக்கிற வேலையை மட்டும் பார்க்கட்டும்! – ஆர்.கே.சுரேஷ் காட்டம்

Get real time updates directly on you device, subscribe now.

வில்லனாக அறிமுகமாகி, ஹீரோவாக வளர்ந்திருக்கும் ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடித்திருக்கும் மலையாளப்படம் தான் ’கொச்சின் ஷாதி அட் சென்னை 03’.

அமைதிக்குப் பின் உள்ள மர்மத்தைப் பற்றிப் பேசும் இந்தப் படத்தை, மலையாள இயக்குநர் மஞ்சித் திவாகர் இயக்கியுள்ளார்.

70 சதவீதம் தமிழிலும், 30 சதவீதம் மலையாளத்திலும் தயாராகியிக்கும் இப்படத்தை தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்கள். அதையொட்டி நடந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Related Posts
1 of 198

அப்போது, நடிகர் சங்கத் தேர்தலில் சம்பந்தமாக நடிகர் ஆர்.கே சுரேஷிடம் கேட்டபோது, காட்டமாகவே பதிலளித்தார்.. நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் போட்டியிட்டால், அவருக்கு எதிராக நான் வேலை செய்வேன். விஷால் மீது நான் ஊழல் குற்றம் சாட்டவில்லை. ஏனெனில் அவர் அப்படிப்பட்ட ஆளில்லை. அவர் எல்லாரையும் பயன்படுத்தி விட்டு கழற்றி விட்டு விடுவார்.

அவர் தேர்தலில் போட்டியிட்ட போது அவருடன் ரித்திஷ் சார் இருந்தார். பிறகு அவர் அவரை விட்டு பிரிந்து விட்டார். அவருடன் இணைந்திருந்த உதயா தற்போது இல்லை. அவருடைய மேனேஜர் முருகராஜ் விஷாலுடன் இருந்தார். தற்போது அவரும் இல்லை. வரலட்சுமிக்கும் இதே நிலை தான். விஷால் ஏன் இப்படி இருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. வரலட்சுமியை நட்பு ரீதியில் குறிப்பிட்டேன். நீங்கள் வேறு விதமாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம்.

ஆனால் கார்த்தி தலைமையில் ஒரு அணி அமைந்தால் அதனை ஏற்போம். இல்லை என்றால் நடிகர் சங்க தேர்தலில் விஷாலுக்கு எதிராக எங்கள் அணி நிச்சயம் போட்டியிடும். அதில் நான் போட்டியிட மாட்டேன். விஷாலுக்கு பதவியெல்லாம் சரிப்பட்டு வராது. அவர் நடிப்புத் தொழிலை மட்டும் பார்க்கட்டும். சட்டப்படி வாய்ப்பிருந்தால் ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ என்ற பெயரை ‘தமிழ்நாடு நடிகர் சங்கம்’ என்று மாற்றம் செய்வோம்” என்றார்.