ருத்ரன்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

விஜய்க்கு ஒரு சுறா..லாரன்ஸுக்கு ஒரு ருத்ரன் என்ற ரேஞ்சிற்கு ரத்தத் தாண்டவம் ஆடியிருக்கிறார் லாரன்ஸ் மாஸ்டர்.

தன் குடும்பத்தைச் சீரழித்தவர்களை நாறடித்தே தீருவேன் என்று சபதமெடுக்கும் பழைய காலத்து ஹீரோக்களின் கதையே ருத்ரனின் கதை

லாரன்ஸ் கால்களைப் பின்னி பின்னி ஆடுகிறார். பின் தூக்கி தூக்கி அடிக்கிறார். இதுபோக காமெடி &காதல் என்ற பெயரில் சற்று நேரம் எதோ செய்கிறார். இவ்ளோ தான் நடிப்பு ஓவர். சரத்குமார் ஆன்லைன் ரம்மியை ரத்து செய்த வருத்தத்தில் இருப்பார் போல. சோர்வாகவே இருக்கிறார். காளிவெங்கட், நாசர், பூர்ணிமா பாக்கியராஜ், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள்

ஜி.வி பிரகாஷின் பின்னணி இசை..ஜி.வியா இதற்கு இசை? எனக் கேட்கும் அளவில் இருக்கிறது. பாடல்களும் பெரிதாக வொர்க்கவுட் ஆகவில்லை. ஒளிப்பதிவு மட்டும் படத்தில் பக்காவாக இருக்கிறது. அப்படியே ஸ்டண்ட் சீக்வென்ஸ் எல்லாமே மாஸாக எடுக்கப்பட்டுள்ளது

வெறும் ஆக்‌ஷன் விரும்பிகளையும் தனது நலன் விரும்பிகளையும் மட்டும் திருப்தி படுத்தினாலே போதும் என இயக்குநர் பைவ் ஸ்டார் கதிரேசன் முடிவு செய்துவிட்டார் போல. அவர் தயாரிப்பாளராக இருந்து செய்யாத தவறை இயக்குநராகச் செய்திருக்கிறார். முனைப்போடு செயல்பட்டு ஒரு நல்ல ஆக்‌ஷன் கமர்சியல் படத்தைக் கொடுத்திருக்கலாம். போதிய திரைக்கதை ஆற்றல் இல்லாமல் ருத்ரன் இடைவேளையை தாண்டுவதற்குள்ளே தள்ளாட ஆரம்பித்து விடுகிறான்
2/5

#Rudhran