நடிகர் சசிகுமார் வெளியிட்ட கிராமத்து இசை ஆல்பம்!

Get real time updates directly on you device, subscribe now.

‘ரகட் பாய் காதல்’ என்கிற பெயரில் ஒரு கிராமத்து மியூசிக் ஆல்பம் உருவாகியுள்ளது.பொறுப்பின்றி கோயில் காளையாக முரட்டுத்தனமாக அடங்காதவனாக வேலையின்றி பொறுப்பின்றித் திரியும் ஒரு கிராமத்து வாலிபன் காதலில் விழுகிறான். கட்டுக்கடங்காத காளையாக இருந்தவனைக் காதல் எப்படிக் கட்டுத்தறிக் காளையாக மாற்றுகிறது என்பதுதான் இந்தப் பாடலின் மையக்கருத்து.

ஒரு திரைப்படக் கதைக்கான முன்னோட்டமாக இந்த இசை ஆல்பம் உருவாகி இருக்கிறது.இதை ஸ்ரீ வித்தகன் இயக்கி உள்ளார் மூவி மெக்கானிக் நிறுவனம் தயாரித்துள்ளது.இதில் கதாநாயகனாக நடித்துத் தயாரித்துள்ளவர் அஜய் கிருஷ்ணா.இவர் நாடோடிகள், நிமிர்ந்து நில்,போராளி, தரணி, அனுக்கிரகன், கடப்புறா கலைக்குழு போன்ற படங்களில் நடித்துள்ளார். கட்டம் போட்ட சட்டை என்கிற படத்தையும் தயாரித்து வருகிறார்.இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளவர் ஸ்மிருதி வெங்கட். இவர் மூக்குத்தி அம்மன், வானம், தீர்ப்புகள் விற்கப்படும், மாறன், மன்மத லீலை, தேஜாவு போன்ற படங்களில் நடித்திருப்பவர்.

இந்த இசை ஆல்பத்தை நடிகரும் இயக்குநரும் கிராமியப் படங்களுக்கு பெயர் பெற்றவருமான சசிகுமார் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். அதேபோல் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் வெளியிட்டுள்ளார். அதன் பிறகு இதற்கான கவனிப்பும் பரவலின் வீச்சும் அதிகமாகி உள்ளது. ஏராளமான பேர் பார்த்து ரசிக்க ஆரம்பித்துள்ளனர்.சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் உயரத்திற்குச் சென்றுள்ளது. ஸ்டார் மியூசிக்கில் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.