கை விரித்த விஜய்; ரூட்டை மாற்றிய எஸ்.ஜே. சூர்யா!

Get real time updates directly on you device, subscribe now.

vijay

‘புலி’ படத்துக்குப் பிறகு தனது 60-வது படமாக எஸ்.ஜே.சூர்யா இயக்கும் ‘குஷி’யின் ரெண்டாம் பாகத்தில் தான் விஜய் நடிப்பார் என்று தொடர்ந்து செய்திகள் வெளியானது.

ஆனால் அந்த செய்திக்கு மாறாக திடீரென்று டைரக்டர் பரதனுக்கு அந்த 60-வது பட வாய்ப்பை இயக்கும் பொறுப்பை கொடுத்து விட்டார்.

Related Posts
1 of 78

இதனால் அதிர்ச்சியடைந்த எஸ்.ஜே.சூர்யா விஜய்க்காக காத்திராமல் தெலுங்கில் படம் இயக்கலாம் என்கிற முடிவில் அங்கு தனது இயக்கத்தில் ‘குஷி’ படத்தில் நடித்த ஹீரோவான பவன் கல்யாணை வைத்து ‘குஷி 2’ம் பாகம் இயக்கலாம் என்று பேசிப்பார்த்தார்.

ஆனால் அந்தக்கதை தனக்கு பொருந்தவில்லை என்று பவன் பேக்கடித்ததால் செய்வதறியாது திகைத்த எஸ்.ஜே.சூர்யா கொஞ்ச நாளைக்கு இயக்கத்துக்கு குட்பை சொல்லி விட்டு மற்ற இயக்குநர்களின் படங்களில் கேரக்டர் ரோல்களில் நடிக்கலாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.