சபா நாயகன்- விமர்சனம்
காதல்ல வெறும் சாதா நாயகனாக இருக்கும் சபா நாயகன் எப்படி கதாநாயகன் ஆகிறார் என்பதே சபா நாயகன் கதை
ஓப்பன் பண்ணா ஹீரோ அசோக்செல்வன் கைது செய்யப்படுகிறார். காரணம் ட்ரங்கன் ட்ரைவ். போலீஸ் ஜீப்ல கிடைக்கிற கேப்ல அவர் தன் காதல்களின் வரலாறைச் சொல்றார். அந்தக்காதல் வரலாற்றில் அவர் செய்யும் சேட்டைகளும், சில்மிஷங்களும் தான் படத்தின் கதை. மொக்கையான காதலுக்கு கூட ஒரு பக்காவான பினிஷிங் இருப்பது இயக்குநர் டச்
தன் படத்திற்கு வரும் இளைஞர்களை ஒருநாளும் ஏமாற்றக்கூடாது என்ற முடிவோடு இருக்கிறார் அசோக்செல்வன். அவரது கதை தேர்வுகள் அப்படி இருக்கின்றன. முழுக்க முழுக்க இளைஞர்ஸ், இளஞிகளை குறி வைத்துள்ள இப்படத்தில் தன் கேரக்டரை செவ்வனே செய்து அசத்தியுள்ளார் அ.செ. மூன்று ஹீரோயின்ஸ் அழகிலும் சரி நடிப்பிலும் சரி..சராசரியை விட பெஸ்ட். அசோக்செல்வனின் நண்பர்களாக வரும், அருண், ஜெய்சீலன், ஸ்ரீராம் என அனைத்து கேரக்டர்களும் நடிப்பில் சிறப்பு செய்துள்ளனர்.
பாலசுப்பிரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ்
ஒளிப்பதிவில் நல்ல மைலேஜ் தெரிகிறது. ஈரோட்டுக் கல்லூரியின் ஷாட்களும், பாடல்களின் பின்னணி லொகேசன்களும் கண்களுக்கு குளிர்ச்சி. இப்படியான ரகளை மிகுந்த கதைகளுக்கு இசையில் ஒரு எனர்ஜி இருக்க வேண்டும். அது லியோ ஜேம்ஸின் இசையில் இருக்கிறது
ரைட்டிங்கில் அறிமுக இயக்குநர் C.S.கார்த்திகேயன் நல்ல நம்பிக்கையைத் தருகிறார். நட்பு காதல் என காமெடியாக அவர் களம் பிரித்து கதையில் களமாடியுள்ளார்..வெல்டன்! காட்சியமைப்பிலும் ஒரு சீக்வென்ஸை நகர்த்தி கதையோடு கனெக்ட் செய்வதிலும் ஒரு தெளிவு இருக்கிறது. எமோஷ்னல் கனெக்ட் படத்தில் மருந்துக்கும் இல்லை. காட்சிகளின் நீளத்தை குறைத்து இன்னும் இருபது நிமிடங்களை சேமித்திருக்கலாம். படத்தின் நீளமே பல இடங்களில் நம்மை டயர்ட் ஆக்குகிறது. ’90கிட்ஸ் கொண்டாடும் வெற்றி’ என ரசிகர்கள் ப்ளக்ஸ் அடிக்கும் வாய்ப்பு கதையில் இருக்கிறது. அதற்கு மேலும் ஓரடி இயக்குநர் பாய்ந்திருக்க வேண்டும். இந்தப்படம் பாஸ்மார்க் வாங்கும் முயற்சி தான் என்றால்…அப்ப ok தான்
2.75/5