சல்லியர்கள்- விமர்சனம்
ஈழப்போராளிகளின் மிக முக்கிய பிரிவான மருத்துவ வீரர்களின் வாழ்வைச் சொல்லும் படம் சல்லியர்கள்
ஈழப்போராளிகளுக்கு மரணபயத்தை காட்ட வேண்டுமானால் அவர்களின் உயிரைக் காப்பாற்றும் மருத்துவர்களை அழிக்க வேண்டும் என முடிவெடுக்கிறது இலங்கை அரசு. மருத்துவர்களாக இருந்தாலும் போர்வீரர்களாகவும் இருக்கும் இந்தச் சல்லியர்கள் எப்படி அரசின் அராஜகத்தைச் சமாளித்தார்கள் என்பதாக கதை பயணிக்கிறது
கதையின் நாயகியாக பரிணமித்து நன்றாக ஸ்கோர் செய்துள்ளார் சத்யதேவி. சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் தனது உயிர்ப்பான நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார் கருணாஸ். திருமுருகன், ஜானகி, மகேந்திரன் உள்பட யாவரும் நல்ல நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்கள்
ஒளிப்பதிவாளர் சிபிசதாசிவம் எளிமையான போர்க்காட்சிகளை கூட பிரம்மாண்டமாக காட்ட முயற்சித்துள்ளார் வாழ்த்துகள். படத்தில் சில காட்சிகளை மாஸ் காட்சிகள் ரேஞ்சிற்கு உணர வைத்துள்ளனர் இசை அமைப்பாளர்கள் கென் மற்றும் ஈஸ்வர். சி.எம். இளங்கோவனின் ஷார்ப்பான எடிட்டிங்கும் படத்தை கவனிக்க வைக்கிறது. வைரமுத்துவின் பாடல்கள் வரிகள் வெகுசிறப்பு
ஈழம் சம்பந்தப்பட்ட படம் என்றால் வெறும் துன்பியல் மட்டுமே இருக்கும் என்ற எண்ணத்தை ஓரளவு தகர்த்துள்ளார் இயக்குநர் கிட்டு. படத்தில் நிறைய கமர்சியல் தருணங்கள் இருக்கின்றன. சில காட்சிகளை மிகைப்படுத்தியுள்ளார் இயக்குநர். நமக்கு தெரியாத பல செய்திகளைச் சொன்ன வகையில் சல்லியர்கள் கவனித்து வரவேற்க வேண்டியவர்களாக உள்ளனர்
3.25/5