பா.ரஞ்சித்தின் சல்பேட்டாவும் அரசியல் படமா?

‘அட்டக்கத்தி படத்தில் எதார்த்த காதல் பேசிய ரஞ்சித்‘மெட்ராஸ்’ படத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் வலியையும் அவர்களின் அரசியலையும் பேசியிருந்தார். பா.ரஞ்சித். மீண்டும் தனது அடுத்த இரு படங்களில் தொடர்ச்சியாக ரஜினிகாந்தை நடிக்க வைத்ததன் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குநராகவும் சில சில சர்ச்சைக்கு உள்ள இயக்குநராகவும் மாறினார்.
அவர் தற்போது வடசென்னை குத்துச் சண்டை வீரர்களின் வாழ்க்கையை “சல்பேட்டா” என்ற பெயரில் படமாக்கி வருகிறார். இதில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கிறார். மேலும் சத்யராஜ், கலையரசன், தினேஷ் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் மூலம் என்ன மாதிரியான அரசியலை ரஞ்சித் பேச இருக்கிறார். என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. அரசியல் இல்லாமல் ரஞ்சித் படம் எடுப்பாரா?