சம்பளத்தில் வேட்டு வைத்த தமன்னா – ஸ்ருதிஹாசன்! : சமந்தா புலம்பல்
தமிழில் ‘தெறி’, ’24’, ‘வட சென்னை’ என மூன்று பெரிய ஹீரோக்களின் படங்களையும் தெலுங்கில் அ ஆ, பிரமோட்சவன், ஜனதா கரேஜ் என மூன்று பெரிய ஹீரோக்களின் படங்களுமாக அரை டஜன் படங்களை வைத்திருக்கிறார் சமந்தா. ஆனாலும் என்ன புண்ணியம் என்கிற கவலையில் தான் இருக்கிறாராம்.
10 எண்றதுக்குள்ள படத்தின் படு தோல்விக்குப் பிறகும் பெரிய ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்கிற வாய்ப்பு வந்ததை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சமந்தாவுக்கு எந்தப்படமும் திட்டமிட்ட தேதிகளில் ரிலீசாவதாதால் புதுப்படங்களை கமிட் செய்வதிலும் அவருக்கு பெரிய இம்சையாக இருக்கிறதாம்.
நடித்து முடித்ததில் ஏதாவது ஒரு படம் மெகா ஹிட்டானால் அதை சொல்லியே சம்பளத்தை உயர்த்தலாம் என்று கணக்கு போட்டார் சமந்தா.
அவர் கெட்ட நேரமோ தெரியவில்லை. மாஸ் ஹீரோக்களின் படங்களில் நடித்திருந்தும் புதுப்படங்களில் கணிசமாக சம்பளத்தை குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறாராம் சமந்தா. தமன்னா, ஸ்ருதிஹாசன் இருவரும் தான் அதற்கு முக்கிய காரணமாம்.
இருவருமே சமந்தாவுக்கு பலத்த போட்டியாக இருப்பதால் அவர்களை சமாளிக்க வேறு வழியில்லாமல் சம்பளத்தை குறைத்திருக்கிறார் சமந்தா.