முதல் நாளில் இவ்ளோ கோடியா? – வசூலில் சாதனை படைக்கும் ‘சீமராஜா’
சிவகார்த்திகேயன் – சமந்தா நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் ஆர் டி ராஜா தயாரிப்பில் உருவாகி, நேற்று ரிலீசாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படம் “சீமராஜா”.
இந்தப்படம் சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் சாதனைகளை முறியடித்திருக்கிறது. ஆமாம் இப்படத்தின் முதல் நாள் வசூலே 13.5 கோடி ஆனதாக கூறப்படுகிறது.
“இந்த வெற்றிக்கு காரணமான சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். ஒரு ஜனரஞ்சகமான படத்துக்கு தேவையான அத்தனை அம்சங்களையும் நிறைத்து ஒரு படத்தை தயாரிப்பது என்பது, அனைத்து மக்களையும் சென்று அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான்.
குடும்பமாக படம் பார்க்கும் ரசிகர்களையும், இளைஞர்களையும் கவர வேண்டும் என்பதே பிரதான நோக்கம். சிவகார்த்திகேயன் நிறைய, வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்று நிலையை தாண்டி, அவரது ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு கலகலப்பான படம் தான் சீமராஜா.
முதல் நாளே தியேட்டர்களுக்கு குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் வருகிறார்கள் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கூறும்போது உள்ளம் பூரிப்பு அடைகிறது. சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் வசூல் சாதனையை இந்த படம் முறியடிக்கும் என்பதில் எந்த வித ஐயம் இல்லை. முதல்நாள் வசூலே 13.5 கோடி என்பது பெருமைக்குரியது, சாதனைக்குரியது.
550 காட்சிகள் திரையிடப்பட்டு உள்ளன. இந்த எண்ணிக்கை இந்த வார இறுதிக்குள் மேலும் கூடும்” என்கிறார் தயாரிப்பாளர் ஆர் டி ராஜா.