விஷால் – இயக்குநர் லிங்குசாமி வெற்றிக்கூட்டணியின் ‘சண்டகோழி -2’ : இன்று பாடல்காட்சியுடன் படப்பிடிப்பு துவங்கியது !

Get real time updates directly on you device, subscribe now.

vishal

விஷால் நடிப்பில் இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘சண்டகோழி’.

இன்று கூட இத்திரைப்படத்தை எங்கு திரையிட்டாலும் தியேட்டரில் கூட்டம் கலைகட்டும். தொலைக்கட்சியில் ஒளிபரப்பானால் டி.ஆர்.பி ரேடிங் அதிகமாகும். இதை போல் பல சாதனைகளை வசூல் ரீதியாகவும் நிகழ்த்திக்காட்டிய சண்டகோழி திரைப்படத்தின் 2ஆம் பாகம் விரைவில் ஆரம்பமாகும் என்று விஷாலும், இயக்குநர் லிங்குசாமியும் பல மாதங்களாக சொல்லி வந்த நிலையில் அதன் படப்பிடிப்பு இன்று பாடல்காட்சியுடன் ஆரம்பமானது.

Related Posts
1 of 69

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெற்றி கூட்டணி, விஷால் – இயக்குநர் லிங்குசாமி இணையும் இப்படத்துக்காக சென்னை பின்னி மில்லில் மிகப்பெரிய அளவில் மதுரை திருவிழா செட் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தில், விஷாலும், கீர்த்தி சுரேஷும் இன்றைய முதல்நாள் படப்பிடிப்பில் பங்கு பெற்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமக்க, சக்தி ஒளிப்பதிவு செய்ய, விஷால் பிலிம் பேக்டரி சார்பில் மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கிறார் விஷால்.