படமாகும் சாந்தி செளந்தரராஜனின் வாழ்க்கை!

Get real time updates directly on you device, subscribe now.

888 Productions-ன் முதல் தயாரிப்பான இப்படத்தை, எழுதி இயக்குபவர் ஜெயசீலன் தவப்புதல்வி. திரைப்படத்தின் தலைப்பு ‘சாந்தி செளந்தரராஜன்’.இதுவரை பல படங்களை விநியோகம் செய்து வரும் 888 Productions நிறுவனம் முதன் முறையாக தயாரிப்புத் துறையில் தடம் பதிக்கிறது.

கடந்த வருடம் மம்மூட்டி நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘மாமாங்கம்’ திரைப்படத்தில ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மனோஜ் பிள்ளையிடம் அசோஸியேட் ஒளிப்பதிவாளராகவும் மற்ற பல படங்களில் இணை, துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஜெயசீலன் தவப்புதல்வி இப்படத்தின் மூலம் கதை, திரைக்கதை, வசனமெழுதி இயக்குனராக அறிமுகமாகிறார்.

இந்தியாவிற்கு 12 சர்வதேச பதக்கங்களையும், தன் சொந்த மாநிலமான தமிழகத்திற்கு 50 பதக்கங்களுக்கு மேல் வென்ற தடகள வீராங்கனை சாந்தி செளந்தரராஜன். ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ் பெண் சாந்தி செளந்தரராஜன்.அவர் வாழ்க்கையில் நடந்த, இதுவரை வெளிவராத பல சுவாரஸ்யமான சம்பவங்கள் மற்றும் திருப்பங்களுடன் கதை வடிவமைக்கப்பட்டு, முழுக் கதையினையும் சாந்தி செளந்தரராஜனிடம் ஒப்புதல் பெற்று, இக்கதை படமாக்கப்பட உள்ளது.