ரிலீசான ரெண்டே நாளில் ‘சர்கார்’ செய்த சாதனை!

Get real time updates directly on you device, subscribe now.

ர்ச்சையில் சிக்கிய படங்கள் சின்னாபின்னாமாகும் காலம் மாறிப்போய் இப்போதெல்லாம் சர்ச்சையில் சிக்குகிற படங்கள் வசூலில் சாதனை படைப்பது ட்ரெண்ட்டாகி விட்டது.

குறிப்பாக விஜய் நடித்த ’கத்தி’, ’மெர்சல்’ ஆகிய படங்கள் ரிலீஸ் நேரத்தில் பெரும் சர்ச்சைகளில் சிக்கி அதுவே படத்தின் இலவச விளம்பரமாக மாறி வசூலில் சாதனை படைத்தது.

அந்த வரிசையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பொலிட்டிக்கல் சட்டயரையாக வந்திருக்கும் படம் தான் ’சர்கார்’.

படத்தின் டைட்டிலைப் போலவே பக்காவான அரசியல்படமான இதில் தமிழகத்தின் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Related Posts
1 of 76

இது ஆளுங்கட்சிக்காரர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியதையடுத்து நேற்று முதல் படத்துக்கு எதிராக அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இப்படி சர்கார் பற்றி பரபரப்பாகப் பேசப்படுவதால் இந்தப் படத்தில் அப்படி என்ன தான் அரசியல் பேசியிருக்கிறார்கள்? என்று ரசிகர்கள் ஆவலோடு தியேட்டர்களுக்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதன் விளைவாக ரிலீசான இரண்டே நாட்களில் சர்கார் படம் 100 கோடியை வசூல் செய்து புதிய சாதனை படைத்திருக்கிறது. விஜய் நடித்த படங்களிலேயே ரிலீசான இரண்டே நாட்களில் 100 கோடியை வசூல் செய்தது இதுவே முதல்முறையாம்.

ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான ஆறு படங்கள் 100 கோடியை வசூல் செய்தது. தற்போது சர்கார் அந்த சாதனையை இரண்டே நாட்களில் செய்திருப்பதால் இந்த சாதனையை விஜய் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.