‘சர்கார்’ கதை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஏ.ஆர்.முருகதாஸ்
விஜய் – முருகதாஸ் கூட்டணியில் தயாராகிருக்கும் ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது.
‘செங்கோல்’ என்ற தலைப்பில் நான் எழுதிய கதை அதை திருடித்தான் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ என்ற தலைப்பில் படமாக்கியுள்ளார். இந்தக் கதையை ஏற்கெனவே நான் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திலும் முறைப்படி பதிவு செய்துள்ளேன். இந்தப் படத்தின் கரு மற்றும் கதை என்னுடையது என்பதால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் இணை இயக்குனர் வருண் ராஜேந்திரன்.
இது சம்பந்தமான வழக்கில் இன்று சன் பிக்சர்ஸ் சார்பில் உயர்நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர், செங்கோல் கதையின் கதாசிரியர் வருண் ராஜேந்திரனுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமரசம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.
மேலும் இந்த விவகாரத்தில் ‘செங்கோல்’ கதையை எழுதிய கதாசிரியர் வருண் என்கிற ராஜேந்திரனுக்கு ‘சர்கார்’ பட டைட்டிலில் நன்றி தெரிவிக்க படத்தின் நிறுவனம் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும் வருண் என்கிற ராஜேந்திரனுக்கு 30 லட்சம் கொடுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல நாட்களாக பேசப்பட்டு வந்த சர்கார் கதை சர்ச்சைக்கு ஏ.ஆர்.முருகதாஸ் முற்றுப்புள்ளை வைத்திருப்பதால் ‘சர்கார்’ படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு படம் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.