சீன்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

 

சூர்யாவின் ஹாட்ரிக் ஹிட் கனவை இந்த சீன் சாத்தியப்படுத்துமா?

பெரும் சவால் கொண்ட கிரைம் ப்ரான்ச் அதிகாரியாக வருகிறார் சூர்யா. நிறைய கிரிமினல்களை உள்ளே தள்ளிய சூர்யா திடீரென தன் வேலையை ராஜினாமா செய்கிறார். அதற்கான காரணம் தான் கதையின் பெரிய ட்விஸ்ட்! மேலும் வில்லன் நஸ்லீன் பணத்திற்காக டெக்னிக்கலாக கொலைகள் செய்து வருகிறார். சவால் கொண்ட சூர்யாவும், அசாதரண வில்லன் நஸ்லீனும் மோதிக்கொள்ளும் காட்சி தான் க்ளைமாக்ஸ்!

சூர்யா பெரும் சவாலான பாத்திரத்தை மிகச்சிறப்பாக ஏற்று நடித்துள்ளார். நஸ்ரியா தனது கேரக்டரை ஆகத்தரமாக செய்துள்ளார். நஸ்லீன் காட்டும் பெர்பாமன்ஸ் நம்மை பதபதைக்க வைக்கிறது. ஆனந்த்ராஜ் செய்யும் காமெடிகள் பல இடங்களில் வொர்க்கவுட் ஆகியுள்ளது. மேலும் பல யூட்யூபர்கள் படத்தில் தலைகாட்டி அசத்தியுள்ளனர்

ஒளிப்பதிவாளர் படத்திற்கு பெரும்பலமாக இருக்கிறார். குட்டி குட்டி லொகேசன்களில் நடக்கும் காட்சிகளிலும் நல்ல நல்ல ஷாட்ஸ் எடுத்துள்ளார். இசையமைப்பாளர் பாடல்களில் சொதப்பினாலும் பின்னணி இசையில் தேறிவிட்டார்

இயக்குநர் ஜீத்துஜோசப் கதையாக இன்ட்ரெஸ்டிங்கான லைனை கையில் எடுத்துள்ளார். ஹீரோவின் சேலஞ்சை அதிகப்படுத்திய விதம் திரைக்கதையை மேலும் ஆர்வமாக்குகிறது. சொல்லி வைத்தது போல ஒரு ஆர்டராக கேரக்டர்களை உருவாக்கியிருப்பது சின்ன உறுத்தல். மேலும் பார்வைச் சவால் கொண்டவர்களை இழிவுபடுத்தும் சில வசனங்கள் காட்சிகளை நீக்கியிருக்கலாம்!
சீன்- தீபாவளி வின்னர்
3/5