செய் செய்யாதே படம் மீது நம்பிக்கை வைத்த ஹெச் ராஜா!

செய் செய்யாதே இசை நிகழ்வில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழு மொத்தமும் கலந்துகொண்டது
நிகழ்வில் ஹெச் ராஜா பேசியதாவது..,
எனது உடல்நலக் குறைவின் போது டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் என் அருகில் இருந்து அளித்த ஆதரவு மிக முக்கியமானது. எந்த ஒரு விஷயத்தையும் நாம் இயல்பாக எதிர்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தேன். இறைவன் அருளால் அறுவை சிகிச்சை முடிந்து வெறும் ஆறு மாதங்களிலேயே உங்கள் அனைவரின் மத்தியிலும் மீண்டும் வந்து பேசும் அளவிற்கு உடல்நலம் பெற்றுள்ளேன். இதற்காக இறைவனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தைப் பொறுத்தவரை இயக்குநர் ராஜா அவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட மறந்துவிட்டார். இந்த படத்தில் நடிகர்களுக்கு எந்தவித மேக்கப்பும் (Make-up) போடப்படவில்லை. முற்றிலும் இயல்பான தோற்றத்திலும், எளிய உடைகளிலும்தான் நடித்துள்ளோம். இயக்குநர் மற்றும் படக்குழுவினர் கூறியபடி நடித்துக் கொடுத்துவிட்டு வந்தோம்.
சூழ்நிலைக்கு ஏற்றவாறு மிகவும் இயல்பான முறையில் இயக்குநர் டாக்டர் ராஜா , அவரது குழுவினர் மற்றும் தம்பி குரு ஆகியோர் இணைந்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர். வெறும் வியாபார அல்லது லாப நோக்கத்தை மட்டுமே முதன்மையாகக் கொள்ளாமல் நேர்த்தியாக இப்படத்தை உருவாக்கியுள்ளனர். இதனால் இத்திரைப்படம் மக்களிடையே நிச்சயமாகப் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.”