சீறு- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

RATING : 3/5

லாஜிக் றெக்கைகளை வெட்டிவிட்டு பறந்தால் அதுதான் சீறு. மாயவரத்தில் லோக்கல் சேனல் நடத்தும் ஜீவாவை போட்டுத் தள்ள லோக்கல் எம்.எல்.ஏ திட்டம் போட்டு சென்னை ரவுடியை வைத்து கட்டம் கட்டுகிறார். ஜீவாவைக் கொல்ல வந்த ரவுடி அவரது உயிரான தங்கையைக் காப்பாற்றுகிறார். தன்னைக் காப்பாற்றியவரைப் பார்த்தே ஆகவேண்டும் என தங்கை ஆர்டர் போட தடுமாற்றத்தோடு சென்னை செல்லும் ஜீவாவிற்கு என்னன்ன அதிர்ச்சிகள் காத்திருக்கிறது என்பது தான் சீறுவின் கதை

தொட்டாலே வெடிக்கும் பட்டாஸாக ஜீவா பொறி கலங்க ஆக்‌ஷன் காட்டியுள்ளார். அவரது ஆக்‌ஷன் சினிமாக்களில் இது ஒரு தரமான முன்னெடுப்பு. செண்டிமெண்ட் காட்சிகளிலும் தனது ட்ரேட்மார்ட் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். நாயகிக்கு இந்தச் சீறுவின் சின்னதாக கூட வேலையில்லை. சதிஷ் அடிக்கும் காமெடிகள் ஓரளவு சிரிக்க வைக்கின்றன. தங்கை கதாபாத்திரத்தில் வரும் காயத்ரி, சென்னை ரவுடியாக வரும் வருண், கொடூர வில்லனாக வரும் நவ்தீப் ஆகியோர் எல்லாம் பொருத்தமான தேர்வுகள்.

டி.இமானின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் இரண்டுமே தரம். ஒளிப்பதிவில் மாயவரத்தின் குளுமையையும், சென்னையின் உக்கிரத்தையும் காண முடிகிறது. ரத்னசிவாவின் நறுக்குத் தெறித்தாற் போன்ற வசனங்கள் வெகு சிறப்பு. பவித்ரா என்ற கேரக்டரை வைத்து பின்பாதியில் கதை சொல்லும் இயக்குநர் சற்று லாஜிக் என்ற விசயத்தில் கவனம் செலுத்தாமல் விட்டது தான் பெருத்த குறை.

பெண்களை மோட்டிவேட் பண்ணும் பின்பாதியில் முன்பாதி போலவே மிக்ஸிங்கை சரிபாதியாக கொடுத்திருந்தால் சீறு இன்னும் சீறியிருக்கும்.