போட்டோ எடுக்க மச்சான் ; கதை கேட்க அக்கா : கில்லாடிப் பொண்ணு ஷாமிலி!

Get real time updates directly on you device, subscribe now.

shalini

முதல் படமே தெலுங்கில் அட்டர் ப்ளாப்பாகி விட்டதால் தமிழ்ப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலி.

தற்சமயம் ‘வீர சிவாஜி’ படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக நடித்து வரும் அவர் படப்பிடிப்பு முடிந்த போதும் புதுப்படங்களில் நடிக்க ஓ.கே சொல்லவில்லை.

இருந்தாலும் ‘வீர சிவாஜி’யில் ஷாமிலியின் போட்டோக்களை பார்த்து விட்ட இயக்குநர்கள் கதையோடு ஷாமிலியின் வீட்டுக் கதவைத் தட்ட, அவரோ நேராக அக்கா ஷாலினியைப் போய்ப் பாருங்கள் என்கிறார்.

ஆமாம், மச்சினிச்சியின் சினிமா வளர்ச்சிக்காக போட்டோஷூட் ஒன்றையே நடத்தி அசத்தினார் மச்சான் அஜித். அதேபோல தனது தங்கையின் சினிமே கேரியருக்கு தன் சார்பு உதவியாகவும் அவர் நடிக்கும் புதுப்படங்களின் கதையைக் கேட்டு ஓ.கே செய்யும் பொறுப்பை ஏற்றிருக்கிறாராம் ஷாலினி.

Related Posts
1 of 49

அந்த வகையில் அக்கா ஷாலினி தங்கை ஷாமிலிக்காக இதுவரை மூன்று கதைகளை ஓகே செய்து வைத்திருக்கிறார்.

‘வீர சிவாஜி’ ரிலீஸுக்கு அப்புறம் அவற்றில் நடிக்க ஒப்பந்தம் போடுவாராம்.

இப்படி அக்கா தங்கச்சிக்காக முழு நேரம் உதவ இறங்கி விட்டாலும் அஜித்தோ போட்டோ எடுக்கணும்னா மட்டும் எங்கிட்ட வா; மத்தபடி கதை கேட்கிறது, கால்ஷீட் கொடுக்கிறது எல்லாம் அக்காவை வெச்சுப் பார்த்துக்கோ என்று சொல்லி விட்டு தாணுன்டு தன் வேலையுண்டு என்று ஒதுங்கி விடுகிறாராம்.

கில்லாடிப் பொண்ணு ஷாமிலி!