அப்படியே நயன்தாரா மாதிரி! : பீதியைக் கிளப்பும் கீர்த்தி சுரேஷ்

‘விஜய் 60′ படத்தின் நாயகியான பிறகு கோடிக்கணக்கான விஜய் ரசிகர்களின் மனசிலும் இடம் பிடித்து விட்டார் கீர்த்தி சுரேஷ்.
அதற்கெல்லாம் காரணம் ‘ரஜினி முருகன்’ தந்த தாறுமாறான வெற்றி தான்.
விஜய் படத்தில் கமிட்டான பிறகு கீர்த்தியை தேடி வரும் இயக்குநர்கள் வட்டமும் பெருத்துப் போக, வந்த வாய்ப்புகளை எல்லாம் வாரிப்போடாமல் நல்ல கதையம்சமுள்ள படங்களுக்கே கால்ஷீட் கொடுக்கிறாராம் கீர்த்தி. அதோடு ஹிந்தி, தெலுங்கு என மற்ற மொழிப்படங்களில் வாய்ப்புகள் வந்தாலும் அதில் ஹிந்தியை மட்டும் தவிர்த்து விடுகிறாராம்.
கேட்டால் ‘ஹிந்திப் படங்களில் எல்லாம் எனக்கு நடிக்கும் ஆசை இல்லை. நயன் தாரா பாணி தான் என் பாணி என்று பீதியைக் கிளப்புகிறார்.
”நயன்தாரா எப்படி தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருக்கிறாரோ அவரைப் போலவே நானும் தென்னிந்திய மொழிப்படங்களில் மட்டும் நடிக்கப் போகிறேன். நயன்தாரா இன்றுவரை ஒரு ஹிந்திப்படத்திலும் நடிக்கவில்லை. நயன்தாராவின் அந்த பாணி தான்” என் பாணியும் என்கிறாராம்.
”நயன்தாரா பாணி தொழில்ல மட்டும் இருக்கட்டும்! நெஜ வாழ்க்கையில வேணாம்” என்பது தான் கீர்த்தி சுரேஷின் அபிமானிகளின் அட்வைசாக இருக்கிறது.
கேட்டுக்க தாயீ…