சிபி சத்யராஜ் நடிக்கும் புதிய படம்!

Get real time updates directly on you device, subscribe now.

தமிழ் திரையுலகில் வளரும் இளம் நட்சத்திர நடிகர் சிபி சத்யராஜ் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களங்கள் மாறுபட்ட கதாப்பாத்திரங்களால் ரசிகர்களை அசத்தி வருகிறார். அவரது சமீபத்திய வெற்றிப்படங்கள் அவருக்கு விநியோக வட்டாரங்களில் ஒரு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. தற்போது அடுத்ததாக Latha Babu & Durgaini of Duvin studios private limited சார்பில் தயாரிப்பாளர்கள் லதா பாபு & துர்க்கைனி தயாரிப்பில், இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் புரடக்சன் நம்பர் 1 படத்தில் நடிக்கவுள்ளார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 5 இன்று காலை படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது.

Related Posts
1 of 2

இன்னும் பெயரிடப்படாத இப்படம், ஒரு கொலையைச் சுற்றி நடக்கும் இன்வஸ்டிகேசன் திரில்லராக உருவாகிறது. இப்படத்தில் சிபி சத்யராஜ் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் தோன்றுகிறார். சென்னை நெடுஞ்சாலைகள் மற்றும் சென்னை மாநகரின் பல இடங்களில் ஒரே நேர கட்டமாக படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

#SibiSathyaraj #சிபி சத்யராஜ்