வரலாறு முக்கியம்- விமர்சனம்
SMS பட காலகட்ட ஜீவாவை கண்முன் நிறுத்தி கலகலக்க வைத்துள்ளார் இயக்குநர் சந்தோஷ் ராஜன்
2000 துவக்கத்தில் வந்த காதல் கதைகளின் மிக்ஸிங் தான் இப்படத்தின் கதையும். எதிர்வீட்டில் குடிவந்திருக்கும் கேரள பெண் மீது லவ்ஸ் விடுகிறார் ஜீவா. பெண் வீட்டில் எதிர்ப்பு வர, எதிர்ப்பில் சிரிப்பு கலந்து ஜீவாவை ஜெயிக்க வைக்கிறார் இயக்குநர் கதை அவ்வளவே. ஆனால் அதைச் சொன்ன விதம் ரியல்லி அமேசிங்
(சில இடங்களில் மட்டும்)
ஜீவாவிற்கு எளிதில் கையாளக்கூடிய கேரக்டர் என்பதால் புகுந்து விளையாண்டிருக்கிறார். விடிவி கணேஷும் அவரும் சேர்ந்து காமெடி கலாட்டாவே செய்திருக்கிறார்கள். விடிவி கணேஷ் தான் இப்படத்தில் காமெடி பீஸ்ட். கே.எஸ் ரவிக்குமார், சரண்யா என ஆர்டிஸ்ட் அனைவருமே சிறப்பான செய்கை செய்துள்ளனர். காஷ்மிரா, ப்ரக்யா என இரண்டு ஹீரோயின்ஸ். இருவருமே குறைவில்லா அழகும் நடிப்புமாக ஈர்க்கிறார்கள்
ஷான் ரஹ்மானின் பின்னணி இசையில் சின்னதாக ஒரு பெஸ்டிவல் மூட் இருப்பது படத்திற்கு ப்ளஸ். பாடல்கள் பரவாயில்லை. சக்தி சரவணனின் ஒளிப்பதிவு சராசரி கமர்சியல் படங்களின் பிரதிபலிப்பாக இருக்கிறது. ஆனாலும் நன்றாக இருக்கிறது
முன்பாதியில் ஜாலியாக துவங்கும் படத்தை எங்குமே சீரியஸ் ஜோனுக்குள் கொண்டுபோகாமல் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் சந்தோஷ் ராஜன். அவர் சந்தோஷப்படும் படியாக நிறைய காட்சிகள் தியேட்டரில் வொர்க்கவுட் ஆகியுள்ளது. படத்தின் நீளத்தில் கொஞ்சம் கை வைத்திருந்தால், சூப்பர் குட் பிலிம்ஸின் வசூல் பை இன்னுமே நிறைந்திருக்கும்.
வரலாறு முக்கியம்- Funny time
3/5