டிஜிட்டல் யுகத்திற்கு வித்திட்ட வெற்றிப்படம் “சிலந்தி”!

Get real time updates directly on you device, subscribe now.

காலங்காலமாக படச்சுருளில் எடுக்கப்பட்டு வந்த திரைப்படங்கள் இன்று முழுமையாக டிஜிட்டல் திரைப்படங்களாக மாறிவிட்டன. இதற்கு வழிகாட்டியதுடன் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு நம்பிக்கையை தந்த முதல் தென்னிந்திய டிஜிட்டல் சினிமா “சிலந்தி” . இந்த படம் 2008ம் ஆண்டு மே 8 ம் தேதி தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் டிஜிட்டலில் ரிலீஸ் ஆகி பெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றிதான் இன்று எல்லோரும் டிஜிட்டல் திரைப்படங்களை தயாரிப்பதற்கு நம்பிக்கையையும் துணிச்சலையும் கொடுத்தது. இந்த படத்தை திருப்பூரை சேர்ந்த சங்கர் பழனிச்சாமி ஜி கம்பெனி சார்பில் தயாரித்திருந்தார். சினிமா பத்திரிகையாளராக “மாலை முரசு” நாளிதழில் பணியாற்றிய ஆதிராஜன் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் பாடல்களை எழுதி இயக்குனராக அறிமுகமானார். (இவர் கன்னடத்தில் ரணதந்த்ரா, தமிழில் அருவா சண்ட, நினைவெல்லாம் நீயடா படங்களை இயக்கியவர்) முன்னா மற்றும் மோனிகா கதாநாயகன் கதாநாயகியாக நடித்திருந்தனர். மற்றும் ரியாஸ் கான், நீலிமா ராணி, சந்துரு ஆகியோரும் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மோனிகா பல படங்களில் நாயகியாக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.