சிம்பு ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார்? : நடிகர் சங்க நிர்வாகிகள் கவலை

நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்ற உடன் அடுத்தடுத்த வேலைகள் வேகம் எடுக்க ஆரம்பித்திருக்கின்றன.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்கிற முனைப்போடு தலைவர் நாசருடன் விஷால், கார்த்தி, பொன்வண்ணன் என சக நிர்வாகிகளும் ஓடி ஓடி வேலைகள் செய்தாலும் முன்னாள் தலைவரான சரத்குமார் இன்னும் கணக்கு வழக்குகளை முழுமையாக கொடுக்காததால் தொடர்ந்து சங்க வேலைகளை செய்வதில் தாமதம் ஏற்படுவதாக தெரிவித்தார் நாசர்.
சரத்குமார் சார் மீடியாக்களை கூப்பிட்டுப் பேசிய போது எஸ்.பி.ஐ சினிமாஸ் உடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாக தெரிவித்தார். அதோடு இரண்டு பேப்பர்களையும் தூக்கி காண்பித்தார்.
ஆனால் அது ரத்து செய்த டாகுமெண்ட்டுகள் இல்லை. அது வெறும் கடிதம் தான். நாங்கள் வந்து தான் ரத்து செய்தோம். அதேபோல அறக்கட்டளையின் கணக்கு, வழக்கு, நடிகர் சங்கத்தின் கணக்கு வழக்கும் இன்னும் முழுமையாக வரவில்லை. இதனால் நாங்கள் பொதுக்குழுவை கூட்டி பேசுவதற்கு கூட முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இன்னும் சில வாரங்கள் பார்ப்போம். சரியான பதில் வரவில்லை என்றால் சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதைச் செய்வோம் என்றார்கள்.
இது சம்பந்தமாகத்தான் நாங்கள் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தோம் என்றாலும் பரபரப்பாக பேசப்படும் பீப் சாங்க் விவகாரம் பற்றி நிருபர்கள் கேட்காமல் இருப்பார்களா?
’பீப் சாங்’ விவகாரம் இவ்வளவு தூரத்துக்கு பிரச்சனை ஆனதுக்கு காரணமே நடிகர் சங்கம் தான்னு சொல்றாங்களே? அதுபற்றி என்ன சொல்றீங்க என்றார் ஒரு நிருபர்.
சார் சிம்பு செய்தது தவறு தான். அவருக்காக நான் ஒரு அப்பா ஸ்தானத்தில் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் அதை எதிர்ப்பவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா? அப்படி ஒரு மன்னிப்பைத் தான் நான் சிம்புவையும் கேட்கச் சொன்னேன். ஆனால் அவரோ நான் சட்டப்படி இந்த பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டார். அவர் ஏன் அப்படி சொன்னார் என்று தெரியவில்லை என்றார் நாசர்.
விஷால், கார்த்தி ரெண்டு பேரும் பேசிக்கிட்டுத்தான் இருந்தாங்க. ஆனா சிம்புதான் நானே இதைப் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டு ஒதுங்கிட்டார். அவர் அப்படி ஒரு முடிவோட இருக்கும் போது நாங்க என்ன செய்ய முடியும்? என்றார் நடிகர் பொன்வண்ணன்.
நானும், கார்த்தியும் மாறி மாறி சிம்புவிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். ஒரு சக உறுப்பினராக நாங்கள் அவரை இந்தப்பிரச்சனையிலிருந்து விடுவிக்கத்தான் ஆசைப்படுகிறோம். அதைத்தான் விரும்புகிறோம். மற்றபடி தனிப்பட்ட காரணங்களுக்காக நாங்கள் அவருக்கு உதவிகள் செய்யவில்லை என்பதெல்லாம் பொய். எந்தக் காரணத்தைக் கொண்டும் நடிகர் சங்கத்திலிருந்து அவரை நீக்க மாட்டோம் என்றார் விஷால் உறுதியாக…! அதோடு இந்த பீப் சாங்க் விவகாரத்தில் நடிகர் சங்கத்தைப் பற்றி உண்மைக்குப் புறம்பான கருத்தை வெளியிட்ட நடிகை ராதிகாவுக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க முடிவு செய்திருக்கிறோம் என்றார்.
பீப்பால எத்தனை பேருக்கு பிரச்சனை?