பிரியதர்ஷன் சாரை கொண்டாடுகிறோம் : இயக்குநர் விஜய் நெகிழ்ச்சி

Get real time updates directly on you device, subscribe now.

priyadharshan1

வாழ்க்கை கொடுத்த குருவை வைத்து படம் தயாரிக்கிற பாக்கியம் எத்தனை பேருக்குக் கிடைக்கும்?

அந்தப் பாக்கியம் கிடைத்த சந்தோஷத்தை முழுமையாகப் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் விஜய்.

தமிழ், மலையாளம், ஹிந்தி என பன்மொழிகளில் பிரபல இயக்குநராக வலம் வரும் ப்ரியதர்ஷன் கஞ்சிவரம் படத்துக்குப் பிறகு தமிழில் இயக்கியிருக்கும் படம் தான் ‘சில சமயங்களில்’.

பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தை பிரபுதேவாவின் பி ஸ்டூடியோஸ் உடன் தனது பிக் பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் இணைந்து தயாரித்திருக்கிறார் இயக்குநர் விஜய்.

Related Posts
1 of 10

படம் இன்னும் ரிலீசே ஆகாத நிலையில் அமெரிக்காவில் கோல்டன் குளோப் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியிருக்கிறது இந்த சில சமயங்களில் திரைப்படம்.

இந்தப் படத்தை முதல்ல ஸ்ரேயா ரெட்டி தான் தயாரிக்கப் போறதா சொன்னாங்க. நான் அவங்கிட்ட கெஞ்சு கேட்டு வாங்கி ஐசரி வேலன் அங்கிளோட இணைஞ்சு தயாரிச்சிருக்கேன். இது எனக்கு பெருமையான விஷயம். என்னைப் பொருத்த வரைக்கும் ப்ரியதர்ஷன் சாரை கொண்டாடுகிறோம்னு சொல்லலாம் என்று நெகிழ்ந்தார் இயக்குநர் விஜய்.

கஞ்சி வரம் படத்தோட கதையை என்கிட்ட ப்ரியதர்ஷன் சார் சொன்னப்போ இதுல நீ நடிக்கிறதா இருந்தா இந்தப்படத்தை எடுக்கிறேன். இல்லேன்னா வேற ஒரு நடிகர் கெடைக்கிற வரைக்கும் காத்துக்கிட்டிருப்பேன்னு சொன்னார்.

ப்ரியதர்ஷன் சாரைப் பொருத்தவரை அவர் அனுபவசாலி மட்டுமல்ல, நல்ல கதை, திரைக்கதையாசிரியரும் கூட. ஆஸ்கார் அவார்டுக்கு தகுதியான ஒரு படத்தை எடுத்திருக்கிறார். அவரோட இந்தப் படத்துல இணைஞ்சது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு என்றார்.

தகுதிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கட்டும்!