‘சொப்பன சுந்தரி’ ஆக தோன்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

Get real time updates directly on you device, subscribe now.

வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னனி நிறுவனமான ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் தற்போது ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தமிழில் தங்களது முதல் படத்தை தயாரித்துள்ளனர்.தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ‘சொப்பன சுந்தரி’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனுடன் ‘சொப்பன சுந்தரி’ என்ற டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

Related Posts
1 of 8

‘லாக்கப்’ படத்தை இயக்கிய இயக்குநர் எஸ். ஜி. சார்லஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். இவருடன் தேசிய விருது பெற்ற லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான், தென்றல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்ததை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. படத்திற்கு ‘சொப்பன சுந்தரி’ என பெயரிடப்பட்டிருப்பதால் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.

#SoppanaSundari #சொப்பன சுந்தரி