முற்றுகிறது மோதல்… : லட்சுமி ராமகிருஷ்ணனையும், குஷ்புவையும் தெருவுக்கு இழுத்த ஸ்ரீப்ரியா

Get real time updates directly on you device, subscribe now.

sripriya

ழை, எளிய மக்களின் அந்தரங்கப் பிரச்சனைகளை ‘நிகழ்ச்சி’ என்ற பெயரில் சேனல் மூலமாக பொதுவெளியில் அலசும் ஜீ தமிழ் டிவியின் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது.

”இதுபோன்ற டிவி நிகழ்ச்சிகளை உடனடியாக தடை செய்ய வேண்டும். இது ஆரோக்கியமானதல்ல” என்று தொடர்ந்து அவர்கள் விமர்சித்து வரும் வேலையில் தான் சமீபத்தில் சன் டிவியிலும் அதைப்பின்பற்றி ‘நிஜங்கள்’ என்ற நிகழ்ச்சியை குஷ்பு நடத்தி வருகிறார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்துகிற நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களே ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வார்கள். குஷ்பு நடத்துகிற நிகழ்ச்சியில் அதில் கலந்து கொள்பவர்களை குஷ்புவே  சென்ற வாரம் கை ஓங்கி அடிக்கப் பாய்ந்தார். இதைப் பார்த்து பலரும் அதிர்ச்சியடைய, பிரபல மாஜி நடிகை ஸ்ரீப்ரியா ”இந்த நிகழ்ச்சி கேவலமான நிகழ்ச்சி என்றும் மக்கள் பிரச்சனையில் தீர்வு சொல்ல சட்டங்கள், நீதிமன்றங்கள் இருக்கும் போது இவர்கள் யார் பஞ்சாயத்து செய்வதற்கு?” என்று கடுமையாக சாடியிருந்தார்.

இதற்கு பதிலளித்த லட்சுமி ராமகிருஷ்ணன் ”என்னுடைய நிகழ்ச்சியில் சரியான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கி வருகிறேன்” என்று பதில் சொல்ல குஷ்புவோ கருத்து சொல்ல மறுத்து விட்டார்.

இந்த நிலையில் இந்த மாதிரியான நிகழ்ச்சிகளின் பின்னணியை மற்ற ஊடகங்கள் அம்பலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் மீண்டும் லட்சுமி ராமகிருஷ்ணனையும், குஷ்புவையும் தெருவுக்கு இழுத்திருக்கிறார் நடிகை ஸ்ரீப்ரியா.

”இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பின் அதில் பங்கேற்றவர்களுக்கு என்ன ஆகிறது?” என்பதை சக பத்திரிகையாளர்கள் கண்டிப்பாக ஆராயுங்கள், உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள்’ என்றும், ‘தொழில் முறை உளவில் ஆலோசனை என்பது சிகிச்சை பெறுபவருக்கும் உளவியல் நிபுணருக்கு மத்தியில் தான் நடக்கும். கேமரா முன்பு நடக்காது. இதைப் போன்ற நிகழ்ச்சிகள் பற்றி விழிப்பு உணர்வு கொண்டு வந்து, தடை விதிக்க வேண்டும்.’ என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அவரின் இந்த புதிய கருத்து லட்சுமி ராமகிருஷ்ணன், குஷ்பு இருவருக்கும் கடும் நெருக்கடியைக் கொடுக்கும் என்றே தெரிகிறது. ஒருவேளை இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு வெளியே வருபவர்களின் அடுத்தடுத்த நிலைகள் மற்ற ஊடகங்களில் வர ஆரம்பித்து விட்டால் தங்கள் பொழப்பு போய் விடுமே என்கிற கவலையில் இருக்கிறார்களாம் மேற்படி இருவரும்.!