யாகாவாராயினும் நா காக்க – விமர்சனம்
ஆதியின் நடிப்பில் கொஞ்சம் கேப்புக்கப்புறம் ரிலீசாகியிருக்கிற படம் தான் ‘யாகாவாராயினும் நாகாக்க’.
அண்ணனோட டைரக்ஷன்ல ஆதி நடிச்சு அவரோட அப்பா தயாரிச்சிருக்கிற பேமிலி படம்னு சொன்னாக்கூட தப்பில்ல.
சென்னைக்கு தன்னோட பாய் ப்ரெண்ட்டோட வந்திருக்கிற ரிச்சா பலோட்கிட்ட ஆதியோட பெரிய இடத்து ப்ரெண்ஸ்ட்கள்ல ஒருத்தன் சும்மா இல்லாம ரிச்சாவை தன்னோட கேமிரா மொபைல்ல போட்டோ எடுக்கிறான்.
அங்கதான் ஆரம்பிக்குது பிரச்சனை?
ஒடி வர்ற போலீசும் ரிச்சாவோட பேக்கிரவுண்ட் என்னன்னு தெரியாம ”பிராத்தல் கேஸ்ல உள்ள போட்டுடுவேன்” என்று மிரட்டுகிறது.
”நான் யாருன்னு தெரியாமலேயே என் மேல கை வெச்சுட்டீங்கள்ல…? இனிமே நீ ரொம்ப அனுபவிப்ப…” என்று சவால் விட்டு போனைப் போடுகிறார்.
அப்புறம் தான் தெரிகிறது. அவர் மும்பையில் பெரிய அளவில் செல்வாக்குள்ள முதலியாரின் மகள் என்று.
அதன்பிறகு நடப்பதெல்லாம் அடுத்தடுத்து என்ன? என்ன? என்று எதிர்ப்பார்க்க வைக்கும் திரைக்கதை சுவாரஷ்யங்கள்.
ஆதிக்கு ஒரு நல்ல கதை அமைஞ்ச சந்தோஷத்தோட அடுத்த படத்துக்கு போகலாம். இறுதிவரை நண்பர்களுக்காக அவர் போராடுவது நட்பில் ஆழத்தை அழகாக்கியிருக்கிறது. ஆனா கதை ஒரு போக்குல போகாம பல போக்குல போறது தான் அவரோட உழைப்புக்கு பெரிய இழுக்கு.
ஹீரோயினா வர்ற நிக்கி கல்ராணி ரொம்ப இளமையா வர்றார். முதல் பாதியில அவருக்கும், ஆதிக்குமான காதல் கலாட்டாக்கள் கலர்புல்.
முதலியாரா வர்ற மிதுன் சக்ரவர்த்தியோட நடிப்புல அப்படி ஒரு முதிர்ச்சி. ‘நாயகன்’ படத்துல கமலை கண்முண்ணே கொண்டு வந்து போகிறார்.
வேற வேற காலகட்டங்கள். வேற வேற ஏரியாக்கள் எல்லாத்துக்கும் கேமராவில் அழகான அவுட்புட்டை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம். பிரசன் பிரவீன் ஷியாமோட இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அபாரம். குறிப்பா பாடல்களில் இளமை வழிந்தோடுகிறது.
நாம பேசுறப்போ வார்த்தைகளை பார்த்துப் பேசணும். இல்லேன்னா அது வில்லங்கம் தான்ங்கிறது தான் டைரக்டர் படத்துல சொல்ல நெனைச்ச மெசேஜ்.
ஆனால் கதையின் போக்கு செல்போனால் வருகிற ஆபத்தை தான் படமாக்கிக் காட்டுது. இதுல டைட்டிலுக்கான விஷயம் படத்துல எங்க இருக்குன்னு தேட வேண்டியிருக்கு.
கிளைமாக்ஸுக்கு அரை மணி நேரதுக்கு முன்னாடி வரைக்கும் பரபரன்னு கொண்டு போற இயக்குநர் அதுக்கப்புறம் லட்சுமிபிரியா ஒரு சைக்கோன்னு ஆரம்பிக்கிற கிளைக்கதையில நம்ம பொறுமையை ரொம்பவே சோதிக்க ஆரம்பிச்சிடுறார்.
இருந்தாலும் அறிமுக இயக்குநரோட படம்னே சொல்ல முடியாத அளவுக்கு மேக்கிங்ல மிரட்டியிருக்கிருக்கிறார் இயக்குநர் சத்ய பிரபாஸ் பினிசெட்டி.