சூர்யாவின் புதிய படத்தின் அப்டேட்!

Get real time updates directly on you device, subscribe now.

நடிகர் சூர்யாவின் புதிய திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 42’ என்று பெயரிடப்பட்டுள்ளது, இயக்குநர் சிவா இயக்கும் இப்படத்தினை Studio Green K.E. ஞானவேல் ராஜா உடன் UV Creations வம்சி-பிரமோத் தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று lavish hotel செட் அமைக்கப்பட்டு, அங்கு பூஜையுடன் இனிதே துவங்கியது.

Related Posts
1 of 22

நடிகர் சூர்யா நடிப்பில் ‘சூரரைப் போற்று, ஜெய் பீம்’ & ‘எதற்கும் துணிந்தவன்’ உட்பட சமீபத்தில் வெளியாகிய அனைத்து திரைப்படங்களும் பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளது மகத்தான தொடர் வெற்றிகளின் மூலம் ‘ஸ்டார்’ மற்றும் ‘நடிகர்’ ஆகிய இரு களங்களிலும் தன்னை நிலைநிறுத்தி இந்தியத் திரையுலகில் தானோரு ‘அபூர்வ இனம்’ என நிரூபித்துள்ளார். சினிமா மீதான ஆர்வம், அவரது முழு அர்ப்பணிப்பு, இணையற்ற விடாமுயற்சி மற்றும் அவரது நிஜ வாழ்க்கையின் வீர உருவம் ஆகியவை பான்-இந்திய அளவில் அவருக்கு மிகப்பெரிய அந்தஸ்தை பெற்றுத்தந்துள்ளன. மேலும், அவரது திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிபெற்றதுடன் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றுள்ளது ‘சூரரைப் போற்று’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், பன்முகத் திறனுக்காக அகாடமி விருதுகளில் (ஆஸ்கார்) உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு கௌரவ அங்க்கீகரத்தையும் பெற்றிருக்கும் நடிகர் சூர்யா,நேற்று (ஆகஸ்ட் 24, 2022) தனது புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார்.

#Suriya42 #சூர்யா 42