டைரி- விமர்சனம்
மீண்டும் ஒரு டிமாண்டி காலனி ட்ரை பண்ணலாம் என்று முயற்சித்திருக்கிறது இன்னாசி பாண்டியன் அருள்நிதி கூட்டணி. இயக்குநர் இன்னாசி பாண்டியன் கதை யோசித்த விதம் அட சொல்ல வைக்கிறது. ஆனால் திரைக்கதை?
ஊட்டியில் இருந்து கோவை செல்லும் அரசு பேருந்தில் சிலபல மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு நபர்களுக்கும் ஒரு இலக்கு இருக்கிறது. மேலும் அந்தப் பேருந்தில் அமானுஷ்ய சக்தியும் இருக்கிறது. போலீஸ் அதிகாரியான அருள்நிதியும் அந்தப்பேருந்துக்குள் வர..அடுத்து என்னாகிறது என்பதே டைரி படத்தின் கதை
அருள்நிதி மற்ற எல்லாப்படங்களையும் விட இதில் அழகாக இருக்கிறார். ஆனால் மற்ற படங்களைப் போலவே தான் இதிலும் நடித்துள்ளார். எமோஷ்னல் காட்சிகளில் அவர் நடிப்பில் இன்னும் அழுத்தம் தேவை. நாயகி பவித்ரா ஆரம்பக்காட்சிகளில் லைக்ஸை அள்ளுகிறார். அடுத்தடுத்து அவருக்கு பெரிதாக ஸ்கோப் இல்லை. கிஷோர் எதற்கு இவ்வளவு சின்ன ரோலுக்கு?
டெக்னிக்கல் டிப்பார்ட்மெண்டில் கேமராமேன் மட்டுமே நெஞ்சை நிறைக்கிறார். ஊட்டி டூ கோவை இரவுப் பேருந்து பயணத்தை அழகாக காட்சிப்படுத்தியுள்ளார். இசை அமைப்பாளர் இன்னும் ஒத்துழைப்பை கொடுத்திருக்கலாம். பின்னணி இசையில் பெரியபலம் இல்லை. இப்படியான அமானுஷ்ய படங்களுக்கு எடிட்டிங் மிக முக்கியம். ஆனால் ரிசல்ட்? படத்தில் டிஜிட்டல் கலர் கரெக்ஷனும், CG வொர்க்கும் பக்கா சொதப்பல்
கதையில் இருந்த சுவாரஸ்யம் திரைக்கதையில் சுத்தமாக இல்லை. படத்தில் வரும் எமோஷ்னல் ஏரியா நம்மை டச் செய்யவே இல்லை. மேக்கிங்கும் ப்ரஷாக இல்லை. சில இடங்களில் வரும் ட்விஸ்ட் மட்டும் அட போட வைக்கிறது. மற்ற இடங்களில் வெறும் வடை தான். முற்றாக புறக்கணிக்க முடியாவிட்டாலும் முழுதாக ஆதரிக்கவும் முடியாத நிலையில் எழுதப்பட்டு எடுக்கப்பட்டிருக்கிறது டைரி
2.5/5
#Diary #டைரி