ஸ்வீட் ஹார்ட்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

Feeling ஆன காதல் படமா? கூப்பிடுங்க நம்ம ரியோவை என முடிவெடுத்து இந்தப்படத்தை துவங்கியிருக்கிறார்கள்

ஹீரோ ரியோவின் ஐந்து வயதில் அவரது அம்மா, அவரையும் அவரது தந்தையையும் விட்டு இன்னொரு ஆணோடு சென்று விடுகிறார். ஹீரோ மனதில் இது ஆழமான வடுவை ஏற்படுத்தி விடுகிறது. அதனால் கல்யாண வாழ்க்கை மீது அவருக்கு நம்பிக்கை இல்லை. அவர் வாழ்வில் காதலியாக வருகிறார் கோபி ரமேஷ். அவருக்கு திருமண வாழ்வு மீது பெரும் நம்பிக்கை உண்டு. இனி என்ன? இருவருக்கும் எப்படி காதல் விதை விழுந்து, செடியாகி கனியானது என்பது தானே?? Yes அதான் கதை

ஹீரோ ரியோராஜ் அளவாக நடித்தாலே போதும் என்ற முன் முடிவோடு நடித்துள்ளார். அவர் கேரக்டரின் ரைட்டிங்கிலும் சின்ன குழப்பம் இருக்கிறது. நாயகி கோபி ரமேஷ் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அருணாச்சலேஸ்வரன் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.

பின்னணி இசை பாடல்கள் இரண்டிலும் யுவன் எதிர்பார்க்க வைத்து ஏமாற்றியுள்ளார். பாலாஜி சுப்பிரமணியம் கூட விஷுவலில் மேஜிக் நிகழ்த்தவில்லை. தமிழரசன் தன் எடிட்டிங்கில் இன்னும் கறார்த்தன்மையைக் காட்டியிருக்கலாம். சில காமெடி காட்சிகள் வேண்டாத திணிப்பு

மிக மென்மையான காதல்கதையாக ஆரம்பிக்கும் படம், ஒரே சீராகச் செல்லாமல், அங்கங்கே டல் அடிக்கிறது. திரைக்கதையில் அழுத்தமே இல்லாததால் படம் பார்க்கும் நமக்கு அலுப்பும் சலிப்பும் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. முன்பாதி படமாவது ஓரளவு OK. பின்பாதியெல்லாம் ஓவர் கடுப்ஸ்

ஸ்வீட் ஹார்ட்- மனதை தொடவில்லை
2/5