டான்- விமர்சனம்
சீரியஸ் மேட்டர்ஸ் எல்லாவற்றையும் சிரித்துக் கடந்து போகும் டான் ஒரேநேரத்தில் சீரியஸாக மாற மற்றவர்கள் சிரிக்கிறார்கள். அதற்கான விடைதேடலின் வழியே சிலபல பழசான ட்ரீட்மெண்ட்களை வைத்து முடிவில் சுபம் போட்டிருக்கிறார் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி
இந்தப்படத்தைப் பொறுத்தவரை இது சிவகார்த்திகேயன் ஏரியா. லவ் காமெடி எமோஷன்ஸ் ஆக்ஷன் என பக்கா பேக்கேஜ். அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார் காமெடி காதலில் மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா. எஸ்.ஜே சூர்யா கேரக்டரில் ஒரு நேச்சர் இருப்பதால் அவரை வழக்கம் போல் ரசிக்க முடிகிறது. சமுத்திரக்கனி கேரக்டரும் நச். சூரி, பால சரவணன், ஆர்.ஜே விஜய், முனிஸ்காந்த், காளிவெங்கட், சிவாங்கி என கேமராவை எங்கு திருப்பினாலும் கூட்டம் கூட்டமாய் நடிகர்கள். சர்ப்ரைஸ் கேரக்டர் ராதாரவிக்கு.
அழகுப்பதுமை பிரியங்கா மோகன் அநியாயத்திற்கு வசீகரிக்கிறார். அவருக்கும் அவரது அப்பாவிற்குமான ஒரு காட்சி எமோஷ்னல் டச்
பின்னணி இசை பாடல்கள் இரண்டிலும் போதுமான அழுத்தம் இல்லை. ஒளிப்பதிவு அசத்தல் ரகம். கலர்புல் டான்ஸ், கலகல காமெடி என முன்பாதியில் டான் பக்காவாக எண்டெர்டெயின்மெண்ட் செய்கிறார். . பின்பாதியிலும் அதை ஒரளவு செய்திருந்தால் படம் இன்னும் தரமாக இருந்திருக்கும். இருப்பினும் க்ளைமாக்ஸ் அப்பா செண்டிமெண்ட் அட்டகாசம்.
நீளத்தைக் குறைத்து திரைக்கதையில் அழுத்தம் சேர்த்திருந்தல் பெரிய டானாக வந்திருப்பார்.
2.5/5