கோடிகளில் சம்பளம் : ஏன் மறுத்தார் டாப்ஸி?

Get real time updates directly on you device, subscribe now.

tapsee1

டெல்லியைச் சேர்ந்த அழகுப் பெண்ணான டாப்ஸி கவர்ச்சியுடன் கூடிய நடிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் ரிலீசான ராகவா லாரன்ஸின் காஞ்சனா 2 படத்தில் அவருடைய நடிப்பைப் பார்த்து ஆச்சரியப்படாதவர்களே இல்லை. அந்தளவுக்கு படம் பார்க்க வந்த ரசிகர்களை தனது அசால்ட்டான நடிப்பால் பயமுறுத்தினார்.

அந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் புதுப்பட வாய்ப்புகள் தேடி வந்தவண்ணம் இருக்கின்றன. அது கூடவே பல விளம்பர பட வாய்ப்புகளும் டாப்ஸிக்கு வர ஆரம்பித்திருக்கின்றன.

அதில் ஒன்று தான் அவரைத் தேடி வந்த மதுபான விளம்பரம்.

பிரபலமாக மதுபான நிறுவனம் ஒன்று கேட்கும் சம்பளத்தை மொத்தமாகக் கொடுத்து தங்கள் பிராண்டு விளம்பரத்தில் நடிக்கக் கூப்பிட்டது.

ஆனால் டாப்ஸியோ பணத்துக்கு மயங்காமல் அந்த மதுபான விளம்பரத்தில் நடிக்க மறுத்து விட்டார்.

கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுக்கத் தயாராக இருந்தும் ஏன் மறுத்தார் டாப்ஸி?

நான் மது குடிப்பதை ஆதரிக்கவில்லை. அதேநேரம் அது ஒவ்வொரு மனிதனுடைய தனிப்பட்ட விருப்பம். அந்த விருப்பதுக்குள் இந்த பிராண்ட் சரக்கைத்தான் என் ரசிகர்கள் குடிக்க வேண்டும் என்று நான் கட்டாயப்படுத்த மாட்டேன். அதனால் தான் அந்த விளம்பர வாய்ப்பை தவிர்த்தேன் என்றார் டாப்ஸி.

சூப்பர்ம்மா…