அள்ளினார் லாரன்ஸ், அழுவுறார் டாப்ஸி!

Get real time updates directly on you device, subscribe now.

tapsee1

‘காஞ்சனா 2′ படத்தின் வெறித்தனமான வசூல் அப்படத்தின் ஹீரோ லாரன்சை கோடிகளில் சம்பளம் கேட்கிற அளவுக்கு உச்சத்தில் கொண்டு போய் வைத்து விட்டது.

அதே படத்தில் பயங்கரமான பேயாக வந்து மிரட்டிய அழகுப் பிசாசு டாப்ஸியின் நடிப்பையும் பார்த்து வியந்து பாராட்டாதவர்களே இண்டஸ்ட்ரியில் இல்லை.

அந்தளவுக்கு அவருக்கும் பாராட்டுகள் குவிந்தது. இருந்தாலும் ”காஞ்சனா 2” ஓட்டத்தால் அம்மஞ்சல்லிக்கு பிரயோசனம் இல்லையாம் டாப்ஸிக்கு!!!

அந்தப் படத்துக்குப் பிறகு சிம்புவுடன் ”கான்” படத்தில் கமிட்டானார், தொடர்ந்து புதுப்பட வாய்ப்புகள் வரும் என்கிற எதிர்பார்ப்போடு இருந்தவருக்கு கமிட்டான ”கான்” படம் திடீரென்று ட்ராப்பாகி விட்ட ஷாக் தகவல் தான் வந்து சேர்ந்தது.

நல்லவேளையாக தமிழ் இண்டஸ்ட்ரி கை விட்டாலும் டாப்ஸியை பாலிவுட் கை விடவில்லை.

ஹிந்தியில் ஏற்கனவே ‘ஷாதி டாட் காம்’ படத்தைத் தொடர்ந்து ‘ஆக்ரா கா தாப்ரா’ படத்தையும் கமிட் செய்திருந்தார். இப்போது மூன்றாவதாக ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுடன் ஒரு புதுப்படத்தில் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு வர படத்தின் கதையென்ன? என்பதைக் கூட கேட்காமல் கால்ஷூட் கொடுத்திருக்கிறாராம்.

மொத்தத்துல ”காஞ்சனா 2” ஓடினதுல காசை அள்ளினார் லாரன்ஸ், சான்ஸே கெடைக்காம அழுவுறார் டாப்ஸி!