விஜய்யுடன் கைகோர்க்கும் செவன் ஸ்க்ரீன்ஸ் ஸ்டுடியோ!

Get real time updates directly on you device, subscribe now.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தங்களது பெருமைமிக்க புதிய படைப்பு குறித்த அறிவிப்பை வெளியிடுவதில் உற்சாகம் அடைகிறது. பிளாக் பஸ்டர் வெற்றி பெற்ற மாஸ்டர் மற்றும் வாரிசு ஆகிய படங்களை தொடர்ந்து. தளபதி விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

Related Posts
1 of 11

தளபதி 67 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை ‘மாஸ்டர்’ இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கத்தி, மாஸ்டர், பீஸ்ட் என அதிர வைக்கும் ஆல்பங்களை கொடுத்த ராக்ஸ்டார் அனிருத், தளபதி 67 படத்திற்காக நான்காவது முறையாக தளபதி விஜய்யுடன் கைகோர்த்துள்ளார்.

இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் கவனிக்கின்றனர். படத்தொகுப்பை பிலோமின் ராஜும், கலையை N.சதீஷ்குமாரும், நடனத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள். இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார்.படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். தளபதி 67 படத்திற்கு உங்களுடைய ஆதரவையும் வாழ்த்துக்களையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்