ஹீரோக்களை அடிப்பாரா பாலா? : நடந்ததை சொல்கிறார் சசிகுமார்

Get real time updates directly on you device, subscribe now.

sasi1

பாலா படம் என்றாலே விசேஷம் தான். இப்படித்தான் அவருடைய படங்கள் இருக்கும் என்கிற முடிவோடு போனால் எதிர்பாராத திருப்பங்களை ரசிகர்களுக்கு தந்தனுப்புவார்.

ரசிகர்களுக்கு இப்படிப்பட்ட அனுபவம் என்றால் அவர் படத்தில் நடிக்கும் ஹீரோக்களுக்கு ஏற்படும் அனுபவமோ வேறுவிதமாக இருக்கும்!

இத்துணூண்டு கேரக்டராவது கிடைக்காதா? என்று எங்கும் ஹீரோக்களுக்கு நடிப்பு சொல்லித் தருகிறேன் என்கிற பெயரில் அவர்களைஅடித்துத் துவைக்கும் வேலையெல்லாம் நடக்கும் என்பதாக வரும் அவ்வப்போது லீக்காகும் படப்பிடிப்பு செய்திகள்.

இப்படி காத்து வாக்கில் வருகிற செய்திகளுக்கு ”ச்ச்சே… ச்ச்சே… பாலா சாரா? அவர் அப்படிப்பட்ட கேரக்டரே இல்லை” என்று முற்றுப்புள்ளி வைக்கிறது சசிகுமாரின் இந்த புத்தம் புது ஸ்டேட்மெண்ட்.

”ஹீரோக்களை அடிக்கிற வேலையையெல்லாம் பாலா சார் எப்பவுமே செஞ்சது இல்லை. இந்த ஷூட்டிங் ஸ்பாட்டை பொறுத்தவரைக்கும் ஒரு நல்ல ஜாலியான அனுபவம். ஷூட்டிங் போறதுக்கு முன்னாடியே ரிகர்சல் பார்த்துக்குவோம். இல்லேன்னா அவரே நடிப்பை வரவெச்சிடுவார். ஆனால் இதெல்லாம் வெளியில தெரியிறதில்லை. அதனால அவர் ஷூட்டிங் ஸ்பாட்ல ரொம்ப கடினமா நடந்துப்பார்னு சொல்றாங்க. அப்படி அவர் நடந்துக்கிற ஆளா இருந்தா மறுபடியும், அவரோட படங்கள்ல நடிச்ச ஆர்யா, விக்ரம், சூர்யா இவங்கெல்லாம் எப்படி அவரோட அடுத்த படத்துல நடிப்பாங்க சொல்லுங்க…” என்கிறார் சசிகுமார்.

பாலாவின் உதவியாளரான சசிகுமார் இப்போது அவருடைய இயக்கத்திலேயே ஹீரோவாக நடிக்கும் போது அனுபவம் எப்படிப்பட்டதாக இருந்தது?

Related Posts
1 of 7

நான் ஒரு ஹீரோவா ஸ்பாட்டுக்கு போகல. இப்பவும் அவரோட உதவியாளராகத்தான் ஸ்பாட்டுக்குப் போனேன். எந்த இடத்திலும் ஒரு சின்ன சங்கடம் கூட இல்லை. ஒரு நல்ல பட அனுபவமா இருந்துச்சு என்று கூடுதல் ஆச்சரியம் தருகிறார் சசிகுமார்.

சரி வரலட்சுமியை எப்படி பாலா டிக் செய்தார்?

‘பரதேசி’ படம் முடியவும் சங்கீதா மேடம் சொல்லித்தான் நான் பாலா சாரைப் போய் பார்த்தேன். இந்தப்படம் ஒரு கரகாட்டம் சம்பந்தப்பட்டதால, நானும் ஒரு டான்சர்ங்கிறதுனால என்னை செலெக்ட் பண்ணியிருக்கலாம். பட் எனக்கு இந்தப்படம் ஆக்டிங்க்ல நல்ல எக்ஸ்பீரியன்ஸா இருந்துச்சு. என்னோட எக்ஸ்ட்ரீம் லெவல் ஆக்டிங்கை இந்தப் படத்துல பார்க்கலாம். ‘போடா போடி’க்கப்புறம் வர்ற படமா இருந்தாலும் என்னோட கேரியர்ல இதுதான் முதல் படம்கிறதை சந்தோஷமா சொல்வேன் என்றார் வரலட்சுமி.

‘தாரை தப்பட்டை’ டைட்டில், போஸ்டர்களைப் பார்த்ததும் கரகாட்டக்கலை சமபந்தப்பட்ட கதைன்னு தெரியுது, என்ன புதுசா இருக்கு?ன்னு கேட்கிறவங்களுக்கு பதில் இன்னும் ரெண்டு மூணு நாள் தான் இருக்கு, அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கங்களேன் என்கிறது படக்குழு.

தயாரிப்பாளர் ‘ஸ்டூடியோ 9’ சுரேஷ் முதல்முறையாக இப்படத்தின் கருப்பையா என்கிற கனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். ”பாலா சார் படத்துல நடிக்கிற வாய்ப்பு கெடைக்கிறதெல்லாம் பொக்கிஷம் மாதிரி. அது எனக்குக் கெடைச்சிருக்கு. அவரோட இயக்கத்துல நடிச்ச எனக்கு இனிமே வர்ற படங்கள்ல நடிக்கிறது ரொம்ப ஈஸியாயிடும். அந்தளவுக்கு அவர்கிட்ட நடிப்பைப் பத்தி நெறைய கத்துக்கிட்டேன்” என்றார்.

இந்த சந்தோஷம் ரிலீசுக்கு அப்புறமும் இருக்கட்டும்..!!!