கும்பமேளாவில் வெளியிடப்பட்ட ‘பிராமாஸ்டரா’ பட லோகோ!
மார்ச் 4 ஆம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு கும்ப மேளாவில் பிராமாஸ்டரா திரைப்பட குழுவினர் ரன்பீர் கபூர், அலியா பாட், அயன் முகர்ஜி ஆகியோர் வானத்தில் ஆயிரக்கணக்கான ட்ரோன்கள் மூலம் ‘பிராமாஸ்டரா’ படத்தின் லோகோவை வெளியிட்டனர்.
கங்கை, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகளும் இணையும் இடம் திருவேணி சங்கமம், ப்ரயாக்ராஜ். இந்த இடத்தில ஒரு கோடி மக்களின் பார்வையில் ட்ரோன்கள் மூலம் பிராமாஸ்டரா படத்தின் லோகோ வெளியிடப்பட்டது.
இந்த லோகோவை வெளியிட கும்பமேளாவை விட சிறந்த இடம் வேறு எதுவும் படக்குழுவினருக்கு கிடைத்திருக்க முடியாது.
இது குறித்து படத்தின் இயகுனர் இயக்குனர் அயன் முகர்ஜியிடம் கேட்டபோது, ‘கும்ப மேளாவில் மகா சிவராத்திரி விழாவில் நாங்கள் எங்களது படத்திற்கான பயணத்தை துவங்கியத்தை சிறந்ததாக கருதுகிறேன்.இந்த லோகோவை வெளியிட எங்களுக்கு 6 மாத காலம் தேவைப்பட்டது. ட்ரோன்கள் மூலம் இந்த பிரம்மாண்ட லோகோவை வெளியிட பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதை தயார்படுத்த பல யுக்திகள் கையாளப்பட்டது.
பிராமாஸ்டரா திரைப்படம் மூன்று பாகங்களை கொண்டது. அதன் முதல் பாகம் கிறிஸ்துமஸ் 2019 ல் வெளியாக இருக்கிறது. இந்த பிரம்மாண்ட படத்தை இயக்குனர் அயன் முகர்ஜி அவர்கள் இயக்கியிருக்கிறார்.