படப்பிடிப்பில் HBD!

Get real time updates directly on you device, subscribe now.

தமிழில் குட் ஹோப் பிக்சர்ஸ் சார்பில் கோகுலகிருஷ்ணன், கலாசா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘தி நைட்’. இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார் விது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள பள்ளங்கி என்கிற இடத்தில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தனது பிறந்தநாளை மலைப்பாங்கான படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் ஹீரோ விது.

இந்தப்படத்தில் நாயகியாக ‘பிக்பாஸ்’ புகழ் சாக்சி அகர்வால் நடிக்கிறார். மற்றும் மதுமிதா முக்கிய வேடத்தில் நடிக்க, பாலிவுட் நடிகர் ரன்வீர் குமார் இந்தப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். அனிமல் திரில்லரும் காதலும் கலந்த படமாக இது உருவாகி வரும் இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குனர் ரங்கா புவனேஷ்வர்.. . ஒளிப்பதிவை ரமேஷ்.G மேற்கொள்ள, இந்தப்படத்தில் இசையமைப்பாளராக அன்வர் கான் அறிமுகமாகிறார்.