தீதும் நன்றும்- விமர்சனம்
இயக்குநர்கள் நடிகர்களாக அவதாரம் எடுக்கும் போது, சில படங்கள் தீதாகவும் சிலபடங்கள் நன்றாகவும் அமையும். தீதும் நன்றும் படம் அந்த வகையில் நடிகர் இயக்குநர் ஆன ராசு ரஞ்சித்திற்குப் பார்டரில் தப்பித்து நன்மையை வழங்கி இருக்கிறது.கூட்டாக இருந்து கொள்ளையடிப்பவர்களின் வாழ்நிலையும்..அந்த வாழ்நிலை ஏற்படுத்தும் திடுக்கிடும் சூழ்நிலைகளும் தான் படத்தின் கதை.
பல படங்களில் நாம் பார்த்துச் சலித்தக் காட்சிகளை கூட அலுப்புத் தெரியாமல் படமாக்குவது ஒரு கலை. அந்தக்கலை இயக்குநர் ராசு ரஞ்சித்திற்கு நன்றாக கை வந்திருக்கிறது. ஒரு நடிகராகவும் அவர் இந்தப்படத்தில் ஈர்த்துள்ளார். மெனக்கெட்டு எதார்த்த நடிப்பை வழங்கி இருக்கிறார். ஈசன், அபர்ணா பாலமுரளி, லிஜோமால், சத்யா ஆகியோரும் நடிப்பில் வெகுவாக ஈர்த்துள்ளார்கள்.
நடிகர்களின் சரியான பங்களிப்பிலே படம் பாதிக்கிணறை தாண்டிவிட்டது எனலாம். ஆனால் படத்தின் முன்பாதி பின்பாதியை பேலன்ஸ் செய்வதில் இயக்குநர் சற்று தடுமாறி இருக்கிறார். பின்னணி இசை ஒளிப்பதிவு இரண்டும் படத்திற்கு பெரும்பலம்.இன்னும் திரைக்கதையில் கூடுதல் உழைப்பைக் கொட்டி இருந்தால் தீதும் நன்றும் படத்தில் நன்மை நிறைய விளைந்திருக்கும்.
RATING : 2.75/5