தோழர் சேகுவேரா- விமர்சனம்

‘எங்கெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களின் இதயத் துடிப்புகள் கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்.’ என்பது சேகுவேராவின் புகழ்பெற்ற வாசகம். இந்த வாகத்தின் சாராம்சம் தான் படத்தின் கதையாக பயணிக்கிறது
ஹீரோ ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள் கல்லூரியில் அவரின் படிப்பிற்கு பெரும் குடைச்சலை கொடுக்கின்றனர். அதை மீறி அவரால் படிப்பில் கவனம் செலுத்த முடிந்ததா? என்பது படத்தின் திரைக்கதை
நாயகனாக நடித்துள்ள இளைஞன் சிறப்பாக நடித்துள்ளார். எதிர்நாயகனாக நடித்தவரும் நல்ல தேர்வு. சத்தியராஜ் பேசும் அரசியல் எல்லாம் அறம் சார்ந்தவை என்பதால் அவற்றை ரசிக்க முடிகிறது
படத்தில் இசை ஓரளவு ஓகே ரகமாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் தனது நேர்த்தியான பணியை சில இடங்களில் செய்துள்ளார்.
ஒடுக்கப்பட்டுவர்கள் குரல்வளையை ஒடுக்கும் போக்கை மாய்க்க வேண்டும் என்ற வேட்கையோடு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இது நல்ல நோக்கம் என்பதில் மாற்றமில்லை. ஆனால் அதை சிறப்பான ஆக்கமாக மாற்றியிருக்க வேண்டும். அவ்விசயத்தில் இயக்குநர் கோட்டைவிட்டுள்ளார். இன்னும் நேர்த்தியான முறையில் கதை சொல்லியிருந்தால் தோழர் சேகுவேரா பெரிதாக ஈர்த்திருப்பார். இருப்பினும் படம் பேசியுள்ள நல்ல விசயத்திற்காக பாராட்டலாம்.
3/5