வாழை பட 25 வது நாள் வெற்றி விழா!

Get real time updates directly on you device, subscribe now.

Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar, Farmer’s Master Plan Production வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, “வாழை”திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாளைக் கடந்திருக்கிறது. இப்படத்தைத் தமிழகமெங்கும் ரெட்ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டது. 4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியினை படக்குழுவினர் கோலாகலமாகக் கொண்டாடினர்.

Related Posts
1 of 7

பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்ற இந்நிகழ்வினில், படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த ரெட்ஜெயன்ட் மூவிஸ் செண்பக மூர்த்தி, அர்ஜூன் துரை ஆகியோருக்கு வெற்றிக்கேடயம் வழங்கப்பட்டது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சார்பில் விழாவில் கலந்துகொண்ட பிரதீப் அவர்களுக்கு  வெற்றிக்கேடயம் வழங்கப்பட்டது.