என்னது டி.இமான் ஹீரோவா நடிக்கப் போறாரா..?
விஜய் நடிப்பில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான ‘தமிழன்’ படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி. இமான்.
தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்தவருக்கு பிரபு சாலமன் இயக்கத்தில் ரிலீசான மைனா படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
இதனால் அடுத்தடுத்து முன்னனி நடிகர்களின் படத்துக்கு இசையமைக்க ஆரம்பித்தார். விஜய்யின் ‘ஜில்லா’ படத்துக்கு இசையமைத்தார். தற்போது அஜீத்தின் ‘விஸ்வாசம்’ படத்துக்கு இசையமைத்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு 100 படங்களுக்கு இசையமைத்து சாதனை செய்த டி.இமான் சமீப காலமாக தனது உடல் எடையை வெகுவாக குறைத்து மிகவும் ஸ்லீம்மாக விழாக்களில் காட்சி தந்து கொண்டிருக்கிறார். இதனால் டி.இமானும் சினிமாவில் ஹிரோவாக நடிக்க தயாராகி விட்டாரோ என்று எல்லோரும் சந்தேகப்பட்டனர். ஆனால் அவரோ அதெல்லாம் இல்லை என்று மறுத்தார்.
இந்நிலையில் தற்போது ‘ஜகஜால கில்லாடி’ படத்தை இயக்கி வரும் இயக்குனர் எஸ்.எழில் அடுத்து டி. இமானை ஹீரோவாக வைத்து படம் இயக்க போகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
எழில் இயக்கிய மைனா, கும்கி, சரவணன் இருக்க பயமேன் ஆகிய படங்களுக்கு டி. இமான் தான் இசையமைத்தார். இதுகுறித்து டி.இமான் தரப்பில் எந்த கருத்தும் சொல்லப்படவில்லை.
வெயிட் பண்ணிப் பார்ப்போம்! என்ன நடக்குதுன்னு?