ஐந்து நாடுகளில் படமாக்கப்பட்டு, உலகத் தரத்தில் ரிலீசாகப் போகும் ஆக்‌ஷன் படம் ‘டைகர் ஜிந்தா ஹே’

Get real time updates directly on you device, subscribe now.

 Tiger Zinda Hai

‘டைகர் ஜிந்தா ஹே’ என்றவுடன் நம் நினைவுக்கு வருவது நெஞ்சை உறைய வைக்கும் அப்படத்தின் பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகள் தான்.

நம்மை பதட்டத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்று வாயை பிளந்து பார்க்க வைக்கும், பரப்பரப்பான சண்டைக் காட்சிகளை கொண்ட, பாலிவுட் ஸ்டார் சல்மான் கான் டைகராக நடிக்கும் ‘டைகர் ஜிந்தா ஹே’ 2017 ஆம் ஆண்டில் வெளியாகும் ஆக்‌ஷன் படங்களிலேயே மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாகும்.

படத்தின் டைகர் கதாபாத்திரம், ஆபத்தான மற்றும் கனரக ஆயுதங்களை ஏந்தி சண்டையிடும் கதாபத்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

படத்தில், சல்மான் வைத்திருக்கும் எந்திர துப்பாக்கியின் பெயர் MG 42. இதை வைத்து டைகர் எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சி தான் படத்தில் மிக முக்கியமான காட்சியாக உள்ளது. இது போன்ற கனரக ஆயுதங்களை கொண்டு உருவாக்கப்படும் காட்சிகள் அவ்வளவு சுலபமல்ல.

MG 42 ஒரு நவீன தொழில் நுட்பத்தில் உருவான கனரக எந்திர துப்பாக்கியாகும். துப்பாக்கியின் எடை மட்டும் 25 முதல் 30 கிலோ இருக்கும். இதனுடன் தோட்டாக்களை கொண்ட மேகஸீன்களை இணைக்கும் போது இது ஒரு ஆபத்தான அழிவின் ஆயுதமாகவே மாறிவிடும்.

படத்தின் இயக்குனர் அலி அபாஸ் இக்காட்சி பற்றி கூறும்போது “சல்மான் கான் போன்ற ஆக்‌ஷன் படத்திற்காகவே உடலை மெருக்கேற்றி வைத்திருக்கும் சிறந்த நடிகரை ஆக்‌ஷன் காட்சிகளில் காண்பிக்கும் போது அவருடைய உருவத்திற்கும், டைகர் ஜிந்தா ஹே போன்ற பலமான திரைக்கதைக்கும் சரியான ஆயுதமாய் MG 42 இருந்தது”.

மேலும், “படத்தின் ஹைலைட்டாக இருக்கும் இந்த காட்சிக்காக, சல்மான் 5000 குண்டுகளை சுட்டுள்ளார். இக்காட்சிகள் தொடர்ந்து 3 நாள்களுக்கு படமாக்கப்பட்டது.

படப்பிடிப்பின் முக்கிய தருணமாய் இந்நிகழ்வு இருந்தது. ஏனெனில் இந்தக் காட்சிகள் வெப்பமான இடத்தில் படம்பிடிக்கப்பட்டதோடு, கனரக துப்பாக்கியும் விரைவிலேயே சூடாகி விடும் என்பதால் நாங்கள் ஒரே மாதிரியான இரண்டு துப்பாக்கிகளை பயன்படுத்தி ஒரு சவாலான சூழ்நிலையில் படமாக்கினோம்” .

சல்மான் கான், கேட்ரினா கைஃப் மீண்டும் இனணயும் இந்த டைகர் ‘ஜிந்தா ஹே’ திரைப்படம் பார்வையாளர்களை சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் உலக தரம் வாய்ந்த ஒரு ஆக்‌ஷன் த்ரில்லராக இருக்கும். டைகர் ஜிந்தா ஹே வரும் டிசம்பர் 22-ல் வெளியாகிறது.