விஜய்யின் அடுத்த படம் யாருடன்? : காத்திருப்போர் பட்டியலுக்குப் போனார் ரஞ்சித்!
‘கபாலி’ படத்தின் வெற்றியும், வசூலும் அப்படத்தின் தயாரிப்பாளருக்கு கலைப்புலி எஸ். தாணுவுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது.
இதனாலேயே படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் தம்பி ரஞ்சித்துக்கு நான் இன்னொரு படம் தரப்போகிறேன் என்று அந்த மேடையிலேயே அறிவித்தார்.
இந்த ஒரு விஷயம் போதாதா? விஜய்யை இயக்கப் போகிறார் ரஞ்சித் என்று கொளுத்திப் போட்டன ஊடகங்கள்.
விஜய்யை வைத்து கத்தி வெற்றிப்படத்தை கொடுத்த வகையில் தயாரிப்பாளர் தாணு விஜய்க்கு நெருக்கமானவர் என்பதால் அவரது பேனரிலேயே அடுத்த படத்தை தயாரிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது என்று அந்தப் படத்தை தான் ரஞ்சித் இயக்குவார் என்று அடுத்தடுத்து செய்திகள் வெளியாகின.
ஆனால் இப்போது அப்படி வந்த செய்திகளில் எதுவுமே இன்றுவரை அதிகாரப்பூர்வமாக இல்லை என்கிற உண்மை தெரிய வந்துள்ளது.
தற்சமயம் பரதன் இயக்கத்தில் 60 படப்பிடிப்பில் இருக்கும் விஜய் தனது அடுத்த படத்தின் இயக்குநரை இன்னும் முடிவு செய்யவில்லை என்பதே நிஜம்.
பரதன் படம் ரிலீசான பிறகு தான் தனது அடுத்த படத்தை முடிவு செய்ய திட்டமிட்டிருக்கிறாராம் விஜய்.
அந்த வகையில் ரஞ்சித் உடபட எல்லா இயக்குநர்களையும் காத்திருப்போர் பட்டியலில் மட்டுமே வைத்திருக்கிறார் விஜய்.
விஜய் 60 திரைப்படம் ரிலீசாகும் நேரத்தில் விஜய்யின் அடுத்த படம் குறித்தான தகவல்கள் வெளியாகும் என்று நம்பலாம்.