அதிமுகவில் இணைகிறாரா அஜித்? : இருக்கிற பிரச்சனையில இது வேற…

Get real time updates directly on you device, subscribe now.

ajith

மிழக முதல்வரின் உடல்நிலை குறித்து தினம் தினம் விதவிதமான கணிப்புகள் செய்திகளாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அதில் எதை நம்புவது? எதை நம்பாமல் விடுவது? என கடந்த பத்து நாட்களாக ஒட்டுமொத்த தமிழ்நாடும் பெருங்குழப்பத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

”முதல்வர் உடல்நலம் குறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தமிழக காவல்துறை எச்சரித்தும் அவதூறுகளின் சூடு கொஞ்சமும் குறைந்தபாடில்லை. இதில் லேட்டஸ்ட்டாக மண்டைச் சூட்டை எக்ஸ்ட்ராவாக ஏற்றியிருப்பது தான் அஜித் – அம்மா சந்திப்பு என்கிற ஊடகச் செய்தி ஒன்று.

பட்டப்பெயர் ‘தல’ என்றிருந்தாலும் பொது நிகழ்ச்சிகளில் அதிகம் தலை காட்டாமல் படப்பிடிப்புக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வருகிறார் அஜித்.

Related Posts
1 of 57

அப்படிப்பட்டவரை அரசியலும் விரைவில் அழைப்பு விடுக்கும் என்று பல வருடங்களுக்கு முன்பாகவே கணிக்கப்பட்டு வைத்திருக்கும் விஷயம்.

இந்த நிலையில் தான் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 14 நாட்களாக அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா நடிகர் அஜித்தை நேரில் சந்திக்க விருப்பப்பட்டதாக மலையாள ஊடகம் ஒன்று செய்தியை கிளப்பி விட்டிருக்கிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா நடிகர் அஜித்திடம் அதிமுகவை பார்த்துக் கொள்ளுமாறும், தான் சரியாகி வரும் வரை அவரிடமே அனைத்துப் பொறுப்புகளையும் கொடுக்கத் தயாராகி விட்டதாகவும், அஜித் மீதுள்ள நம்பிக்கை தான் அதற்கு காரணம் என்றும் அந்த ஊடகம் அளந்து விட்டிருக்கிறது.

எந்தப் பக்கம் புரண்டு புரண்டு படுத்தாலும் இப்படி ஒரு நம்ப முடியாத செய்தியை அந்த மலையாள ஊடகம் மட்டுமல்ல, கூடவே ஆங்கில செய்தி இணையதளம் ஒன்றும் வெளியிட்டிருக்கிறது.

இன்னும் பிரபலமாகாத அந்த இணையதளம் தங்களது இணையதளத்தை பிரபலமாக்கும் ஐடியாவோடு இப்படி ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது என்பதும் பலரது கருத்தாக இருக்கிறது.