‘நான் தகுதி இல்லாதவன்’ – தேடி வந்த பட்டத்தை நிராகரித்த உதயநிதி!

Get real time updates directly on you device, subscribe now.

‘கூடல் நகர்’, ‘தென்மேற்குப் பருவக்காற்று’, ‘தர்ம துரை’ ஆகிய படங்களில் கிராமத்து வாழ்வியலை அழகாகக் காட்சிப்படுத்தியவர் இயக்குனர் சீனு ராமசாமி.

இவருடைய இயக்கத்தில் ஏற்கனவே தயாராகியிருக்கும் ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படம் திரைக்கு வரத் தயாராக உள்ளது. ‘மாமனிதன்’ என்ற படத்தின் வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது.

இதற்கிடையே, உதயநிதி ஹீரோவாக நடித்து தயாரிக்க, சீனு ராமசாமி இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் தான் ‘கண்ணே கலைமானே’.

உதயநிதிக்கு ஜோடியாக தமன்னா நடித்திருக்கும் இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார்.

உதயநிதியுடன் இயக்குனர் சீனு ராமசாமி!
Related Posts
1 of 4

இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. படத்தின் டைட்டிலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிற போதிலும் படத்தில் உதயநிதியின் நடிப்பைப் பார்த்து மன நிறைவோடு இருக்கிறாராம் சீனு ராமசாமி.

அந்த மன நிறைவை வெளிப்படுத்தும் விதமாக “கண்ணே கலைமானே’ படம் முழுவதும் பார்த்து முடித்த கணத்தில் என் மனதில் உதயநிதி ஸ்டாலினை ‘மக்கள் அன்பன்’ என்றே அழைக்கத் தோன்றியது” என்று பாராட்டி பட்டம் ஒன்றை கொடுத்திருக்கிறார்.

ஏற்கனவே, தர்ம துரை படத்தில் நடித்த போது விஜய் சேதுபதிக்கு ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டத்தை வழங்கிய சீனு ராமசாமி, தற்போது உதயநிதிக்கு ‘மக்கள் அன்பன்’ பட்டத்தை வழங்கியுள்ளார்.

சீனு ராமசாமி கொடுத்த பட்டத்தை விஜய் சேதுபதி ஏற்றுக் கொண்டார். ஆனால் உதயநிதியோ ‘இதற்கு நான் தகுதி இல்லாதவன்’ என்று தன்னடக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.