‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தின் தபால் தலை வெளியீடு! நடிகர் ஆர்.கே வின் புதிய முயற்சி

Get real time updates directly on you device, subscribe now.

kayal-devaraj

ஆர்.கே மற்றும் இயக்குநர் ஷாஜி கைலாஷ் வெற்றிக் கூட்டணியில் வெளிவந்த ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அதையொட்டி ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்திற்கான சிறப்புத் தபால்தலை வெளியிடப்பட்டது.

இந்த தபால் தலையில் நடிகர் ஆர்.கே மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் தொடர்வண்டியின் படமும் இடம்பெற்றுள்ளது.

இதுவரை எந்த சினிமாவுக்கும் கிடைக்காத பெருமை இதன் மூலம் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்திற்கு கிடைத்துள்ளது.

இதை நாம் அனுப்பும் தபால்களில் ஒட்டி அனுப்பலாம். நடிகர் ஆர் கே, நடிகைகள் நீதுசந்திரா, கோமல் சர்மா, வசனகர்த்தா பிரபாகர், கயல் தேவராஜ் ஆகியோர் இணைந்து தபால் தலையை வெளியிட்டனர்.