“சூப்பர் குட் பிலிம்ஸில்”நடித்தது பெருமை-டி எஸ் கே !
சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ள திரைப்படம் “வரலாறு முக்கியம் “. ரொமான்ஸ் காமெடி ஜானரில் கம்ர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் 9 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்வினில் நடிகர் டி எஸ் கே பேசியதாவது…,
“சூப்பர் குட் பிலிம்ஸில் நான் நடித்தது எனக்கு பெருமையான விஷயம். இயக்குனர் போன்ற ஒரு கூலான மனிதரை பார்க்க முடியாது, மொத்த குழுவையும், நடிகர்களையும் சரியாக வழிநடத்தி படத்தை உருவாக்கியுள்ளார். படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை தாருங்கள்.”
இத்திரைப்படத்தில், ஜீவா மற்றும் காஷ்மீரா பரதேசி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரக்யா நாக்ரா, VTV கணேஷ், K.S.ரவிக்குமார், மொட்ட ராஜேந்திரன், ஷாரா சரண்யா, டி எஸ் கே, சித்திக் மற்றும் பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
#VaralaruMukkiyam