பேய்ப் படம்னா பயப்படணும்; சிரிக்கக் கூடாது : திகிலை கிளப்பும் டைரக்டர்

Get real time updates directly on you device, subscribe now.

payam-oru-payanam

வர் சொல்வதும் வாஸ்தவமாகத்தான் இருந்தது.

சார் பேய்ப்படம்னா ஆடியன்ஸ் சிரிக்கணும்1 ஆனா தமிழ்ப்படங்கள்ல என்ன நடக்குது? பேய்ப்படம்னாலே காமெடியா இருக்கும்னு ரசிகர்கள் மனநிலைக்கு வந்துட்டாங்க.

அதெப்படி சார் காமெடிப்படம்னா தான் சிரிக்கணும், இங்க பேய்ப்படம்னாலே சிரிக்கிறாங்க. ஆனா எங்க படம் அப்படியில்லை! இது ஒரு பேய்ப்படம் தான்! ஆனா ஆடியன்ஸ் சிரிக்க மாட்டாங்க, பயப்படுவாங்க என்றபடியே பேச ஆரம்பித்தார் இயக்குநர் மணிசர்மா.

ஆக்டோ ஸ்பைடர் நிறுவனத்தின் சார்பில் எஸ்.துரை, தயாரித்திருக்கும் பயம் ஒரு பயணம் படத்தின் இயக்குநர்!

Related Posts
1 of 4

‘உன்னைப் போல் ஒருவன்’ பரத், விசாகா சிங், மீனாக்‌ஷி தீட்சித், சிங்கம் புலி, ஊர்வசி, ஞானவேல், யோகி பாபு, ‘லொள்ளு சபா’ மனோகர் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஒய்எஸ். பிரசாத் இசையமைத்திருக்கிறார்.

‘தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிறைய பேய்ப் படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்தப் படங்களிலிருந்து ‘பயம் ஒரு பயணம்’ படம் மாறுபட்டு இருக்கும்.

ஹாலிவுட்ல எடுக்கிற பேய்ப்படங்கள் எல்லாமே செம த்ரில்லிங்க்கா இருக்கும். ‘ தி ரிங் (The Ring ) ‘ படத்தையெல்லாம் தனியா உட்கார்ந்து பார்க்கிறதுக்கே பயமா இருக்கும், அந்த ரிங் சவுண்ட் வந்த உடனே உள்ளுக்குள்ள ஒரு பயம் வந்துடும். தி எக்சோர்சிஸ்ட், தி ஓமன் படங்களும் அப்படித்தான். அப்படி ஒரு பயமுறுத்துற படமாகத்தான் இந்த ‘பயம் ஒரு பயணம்’ படமும் இருக்கும் என்றார்.

பொதுவாக பேய்ப் படங்கள் என்றாலே சமீப காலத்தில் நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கிறார்கள். ஆனால், இந்தப் படத்தில் ஆரம்பம் முதல் கடைசி வரை படத்தின் தலைப்பைப் போலவே பயம் இருந்து கொண்டேயிருக்கும்.

அப்போ தியேட்டர்ல இருக்கிற வரை ரசிகர்கள் பயந்து தான் ஆகணும் அப்படித்தானே டைரக்டர் சார்..?