5-வது வாரத்திலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிநடை போடும் ‘வாரிசு’!

Get real time updates directly on you device, subscribe now.

கடந்த பொங்கல் பண்டிகை வெளியீடாக விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் வெளியானது. தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் பிரபல இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.

மேலும் பல முன்னணி கலைஞர்களுடன் குடும்பப்பாங்கான அதேசமயம் இளைஞர்களை கவரக்கூடிய பாட்டு, நடனம், சண்டை என கமர்ஷியல் அம்சங்களுக்கும் குறைவில்லாமல் இந்தப்படம் உருவாகி இருந்தது. குறிப்பாக ரஞ்சிதமே, ஜிமிக்கி பொண்ணு ஆகிய பாடல்கள் படம் பார்க்கும் ரசிகர்களை எழுந்து ஆட தூண்டுவதாக இருப்பதை திரையரங்குகளில் பார்க்க முடிகிறது.அந்தவகையில் பல திரையரங்குகளில் வாரிசு திரைப்படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்து வருகிறது.

Related Posts
1 of 10

இது ஒருபுறம் இருக்க, வட இந்தியாவில் வெளியாகிய வாரிசு படத்தின் இந்தி பதிப்பும் வெற்றிகரமாக 30 நாட்களை கடந்துள்ளது. பிரான்சில் முதன்முறையாக ஒரு தமிழ் படத்திற்கு 25வது நாள் கொண்டாட்டம் நடந்துள்ளது என்றால் அது வாரிசு படத்திற்கு தான் என்கிற செய்தி வீடியோவுடன் சோஷியல் மீடியாவில் வலம் வருகிறது. மலேசியாவில் வாரிசு திரைப்படம் திரையிடப்பட்ட முதல் இரண்டு வாரங்களில் பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்தது. தற்போது மூன்றாவது வாரத்தில் இருந்து 10வது இடத்தில் இருந்தாலும் இப்போதும் 30 க்கும் குறையாத காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தரவரிசைப்படி பல திரையரங்குகளில் இன்னும் முதலிடத்தில் தான் வாரிசு திரைப்படம் இருக்கிறது.

விஜய் படங்களிலேயே இரண்டாவது முறையாக உலக அளவில் 300 கோடி வசூலை கடந்த படம் என்கிற பெருமையை பிகில் படத்தை தொடர்ந்து வாரிசு பெற்றுள்ளது. அந்த வகையில் உலக அளவில் 300 கோடிகளை கடந்த ஐந்தாவது தமிழ்ப்படம் என்கிற பெருமையும் வாரிசு படத்திற்கு சேர்ந்துள்ளது.