சினிமாவே வேண்டாம் : வெறுத்துப் போய் வெளிநாட்டுக்கு ஓடிய சிம்பு நாயகி!
தமிழ்சினிமா ரசிகர்களுக்கு குஷ்பு, ஹன்சிகா மாதிரியான கொழுக் மொழுக் நடிகைகளை ரொம்பவே பிடிக்கும்.
அந்த லிஸ்ட்டில் தமிழில் அறிமுகமானவர் தான் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய்.
செல்வராகவன் இயக்கத்தில் ‘மயக்கம் என்ன’ படத்தில் அறிமுகமானவர் ‘ஒஸ்தி’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார்.
இரண்டு முன்னணி ஹீரோக்களின் படங்களில் தலை காட்டியும் கூட அடுத்தடுத்து புதுப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று காத்திருந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தமிழில் சுத்தமாக படமே இல்லாத நிலையில் பெங்காலி, தெலுங்கு, மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
ஆனால் அங்கும் கூட இரண்டு நாயகிகளில் ஒருவராகவே நடிக்க அழைத்தார்களே தவிர சோலோ ஹீரோயின் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதனால் வெறுத்துபோன ரிச்சா கங்கோபாத்யாய், இனிமேல் எப்படிப்பட்ட வாய்ப்பு வந்தாலும் சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்று முடிவெடுத்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.
ஏற்கனவே எம்.பி.ஏ பட்டப்படிப்பை முடித்த ரிச்சா தொடர்ந்து படிக்கும் ஆசையில், மேல் படிப்பிற்காக அமெரிக்காவிற்கு சென்று விட்டாராம்.