விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தின் அப்டேட்

நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கி வரும் திரைப்படம் “வீரமே வாகை சூடும் “. அதிகார மட்டதிற்கு எதிராக எளியவன் ஒருவன் போர்க்கொடி தூக்கும் கதைதான் இப்படம்.
இப்படத்தின் படக்குழுவின் அர்ப்பணிப்பு இப்படம் அனைத்து கட்ட பணிகளும் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. வரும் 2022 ஜனவரி 26 அன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.
இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க, டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, RNR மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, KSG வெங்கடேஷ்,
மஹா காந்தி, மரியம் ஜார்ஜ்
Black sheep தீப்தி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் இப்படத்தினை தயாரிக்கிறார். து.ப. சரவணன் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.